
மன்னார் பிரதான பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை (9) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் வீதி ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வீதியோர தடுப்பு கல்லில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தள்ளாடி பகுதியில் இருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் நகர போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
Add Comment