சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்கவை இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
நேற்றிரவு (14.12.22) அவர் தாக்கப்பட்டு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக காவற்துறையினர் தெரிவித்தனர்.
நுகேகொட, பகொட வீதியில் அமைந்துள்ள அவரது கலையகத்தில் வைத்து அவரை இருவர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் அவரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மிரிஹான காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love
Add Comment