
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உமநகரி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப தம்பதி தாக்கப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 30 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் கூரை ஓடுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ள மூன்று கொள்ளையர்கள் ஆயுதங்களால் தம்பதியினரை சரமாரியாக தாக்கி பணம் மற்றும் தாலிக்கொடி உட்பட 30 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை களவாடிச் சென்றுள்ளனர். பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார்,முருங்கன், காவல்துறையினர் மற்றும் தடயவியல் பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீட்டில் சில வருடங்களுக்கு முன்பும் பாரிய திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


Spread the love
Add Comment