Home இலங்கை கரையோதுங்கிய தமிழக மீனவர்கள்

கரையோதுங்கிய தமிழக மீனவர்கள்

by admin
தமிழக மீனவர்கள் படகின் இயந்திர கோளாறு காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில்  கரையோதுங்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டையை சேர்ந்த 4 மீனவர்களே பைபர் படகில் கரையொதுங்கியுள்ளனர்
கரையோதுங்கிய மீனவர்களிடம் வல்வெட்டித்துறை  காவல்துறையினர்   விசாரணைகளை முன்னெடுத்த போது, நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடிக்க வலைகளை விரித்து இருந்த வேளை தமது வலைகளை இலங்கை மீனவர்கள் சிலர் அறுத்து எடுத்துச் சென்றனர். அவர்களை துரத்தி வந்த வேளையே தமது படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தாம் வல்வெட்டித்துறை பகுதியில் கரையொதுங்கினோம் என தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் 4 மீனவர்களையும் பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More