Home உலகம் முன்னாள் போப் காலமானார்

முன்னாள் போப் காலமானார்

by admin

முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வத்திகான் இல்லத்தில் காலமானார். கத்தோலிக்கா்களின் தலைமைப் பொறுப்பான போப் பதவியை சுமார் 8 ஆண்டுகள் வகித்த 16-வது பெனடிக்ட், 2013-ம் ஆண்டில் உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார். இதன் மூலம் 1415-ம் ஆண்டு 12-வது கிரிகோரிக்குப் பின்னா்  போப் பதவியில் இருந்து விலகிய முதல் நபரானார்.

16-வது பெனடிக்ட் தமது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை வாட்டிகனில் உள்ள மாத்தர் எக்லெசியா மடாலயத்தில் கழித்து வந்துள்ளார்.  எதிா்வரும் ஜனவரி 2-ம் திகதி முதல் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில்  அவரது  உடல் வைக்கப்படும், எனவும் இறுதிச்சடங்கு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் வத்திகான் கூறியுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More