இலங்கை பிரதான செய்திகள்

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இல்லாவிடின் போராட்டம் என்கிறார் சுமந்திரன்!

சமஸ்டி கட்டமைப்பில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு சாத்தியம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி வழங்கிய காலக்கெடுவுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கவில்லை என்றால், தமிழ் மக்களை அணி திரட்டி போராட்டங்களில் ஈடுபட நேரிடும்  எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணும் வகையில் டிசெம்பர் 13ஆம் திகதி சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது. இதன்போது பல முற்போக்கான கருத்துகள் வெளியிப்பட்டன. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு இதில் முக்கியப் பங்குள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி,  தொடரும் நில அபகரிக்கப்பு, என்பவற்றுக்கான தீர்வுகளே பிரதான விடயமாக உள்ளன எனவும் தெரிவித்தார்.

நல்லிணக்கத்தை அரசியல் தீர்வின் ஊடாக அடைய முடியுமா என்பதை பெப்பரவரி 04ஆம் திகதிக்கு முன்னர் தெரிந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி கூறியிருக்கிறார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வு என்ன என்பதை  அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே தமது கட்சியின் நிலைப்பாடு. அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு எவருக்கும் தேவையில்லை. அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு உண்மையில் அதிகாரப் பகிர்வாக இருக்காது. சமஸ்டி கட்டமைப்பில் மாத்திரமே அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க முடியும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

இவ்வாறு தாம் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் ஜனாதிபதி இதனை தீர்க்க முடியும் என தெரிவித்து காலக்கெடு ஒன்றையும் ஜனாதிபதியே அறிவித்துள்ளார். இந்த காலக்கெடுவுக்கு  இணக்கமும் வழங்கப்பட்டது. தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் புதிதாக எதனையும் ஆரம்பிக்க வேண்டியதில்லை. 35 வருடங்களாக இது தொடர்பில் பேசப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, பல இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கூறியுள்ள காலக்கெடுவுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும். இதனை செய்யாது காலத்தைக் கடத்தும் செயற்பாடாக இது இருக்கக்கூடாது.  பல்வேறு சந்தேகங்களுடனேயு தாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாகவும், பல தடவைகள் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாயினும், எதுவும் நடக்கவில்லை என்ற நிலையிலும், பேச்சுவார்த்தைக்கு தாங்கள் வரவில்லை என்கிற பளிச்சொல் தமக்கு வரக்கூடாது என்பதாலேயே தாம் கலந்துரையாடலில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

காலக்கெடுவுக்குள் இதனை செய்ய முடியாதென தெரிந்து ஜனாதிபதி தம்மை ஏமாற்றுவராக இருந்தால், நாட்டினதும் சர்வதேசத்தினதும் கண்களில் மண்ணைத் தூவும் செயற்பாடாக இது இருக்குமாக இருந்தால் அவை உலகுக்கு அம்பலப்படுத்தப்படும். இது மட்டுமல்ல நாட்டில் தமிழ் மக்களை அணி திரட்டி நியாயமான அரசியல் சுதந்திரத்துக்காக பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும்  எனவும் சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

Spread the love
 
 
      

3 Comments

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை மக்களின் பாரம்பரிய அல்லது நவீன வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான அடிப்படைத் தேவைகளையும் முக்கிய தேவைகளையும் அரசாங்கத்தினால் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்நிலையை மாற்றி அமைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

  அடிப்படைத் தேவைகள்:
  1. வாழ்க்கை முறை
  2. நிதி
  3. தூய காற்று
  4. தண்ணீர்
  5. உணவு
  6. ஆடை
  7. பாதுகாப்பு
  8. ஆரோக்கியம்
  9. நிலம்
  10. வீடு

  முக்கிய தேவைகள்:
  1. கல்வி
  2. வளங்கள்
  3. விவசாயம்
  4. தொழில்
  5. வர்த்தகம்
  6. வேலைகள்
  7. தகவல் தொடர்பு
  8. மின்சாரம்
  9. போக்குவரத்து
  10. சமூகப் பிரச்சினைகளும் அவற்றின் தீர்வுகளும்

  மக்களின் அடிப்படை மற்றும் முக்கிய தேவைகளை நிறைவேற்றக் கூடியது தான் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பல வருடங்களாக அரசியல் தீர்வு தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தினாலே மக்களின் பல தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இவற்றையாவது அரசாங்கம் செய்ய வேண்டும்.

 • அதிகாரம் கிடைத்த பின் செய்ய வேண்டிய சில பணிகள்:

  1. “மக்களின் அடிப்படை மற்றும் முக்கிய தேவைகள் நிறைவேற்றப்படும்” என்ற தொலை நோக்கை மனதில் வைத்துப் பணிகளைச் செய்யவேண்டும்.

  2. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒப்புக்கொண்ட பணிகளை முடித்து இலக்கை அடையக்கூடியவர்களுக்கு பதவிகளைக் கொடுத்து, பொறுப்பும் அதற்கேற்ப அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.

  3. பணிகளை முடித்து, இலக்கை அடைந்து, தொலைநோக்கை அடையத் தேவையான அட்டவணையை உருவாக்கி செயல்பட வேண்டும்.

  4. மக்களின் அடிப்படை மற்றும் முக்கிய தேவைகளை நிறைவேற்றத் தேவையான தரவு மற்றும் தகவல்களை திரட்ட வேண்டும். இதை உடனடியாகத் தொடங்க முடியும்.

  5. பணிகளை சிரமதானம் அல்லது பண்டமாற்று அல்லது உள்நாடு அல்லது வெளிநாட்டுப் பணம் அல்லது நன்கொடை அல்லது புலம்பெயர்ந்தோர் அல்லது வேறு வழிகள் மூலம் செய்து முடிக்க வேண்டும்.

  6. வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். திருப்பிக் கொடுக்கக் கூடிய கடனை மாத்திரம் பெற்று அதி தேவைகளுக்குச் செலவு செய்ய வேண்டும்.

  7. பாரம்பரிய வாழ்கை முறையை பின்பற்ற குறைந்த அளவு வெளிநாட்டுப் பணம் தேவைப்படும். நவீன வாழ்கை முறையை பின்பற்ற கூடிய அளவு வெளிநாட்டுப் பணம் தேவைப்படும்.

  8. மாகாணத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் திறம்பட உழைக்க வேண்டும். இதற்கு, தொலை நோக்கை அடையத் துடிக்கும் தலைமைத்துவம் வேண்டும்.

 • அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு

  இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை மக்களின் பாரம்பரிய அல்லது நவீன வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான அடிப்படைத் தேவைகளையும் முக்கிய தேவைகளையும் அரசாங்கத்தினால் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்நிலையை மாற்றி அமைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

  அடிப்படைத் தேவைகள்:

  1. வாழ்க்கை முறை
  2. நிதி
  3. தூய காற்று
  4. தண்ணீர்
  5. உணவு
  6. ஆடை
  7. பாதுகாப்பு
  8. ஆரோக்கியம்
  9. நிலம்
  10. வீடு

  முக்கிய தேவைகள்:

  1. கல்வி
  2. வளங்கள்
  3. விவசாயம்
  4. தொழிற்துறை
  5. வர்த்தகம்
  6. வேலைகள்
  7. தகவல் தொடர்பு
  8. மின்சாரம்
  9. போக்குவரத்து
  10. சமூகப் பிரச்சினைகளின் தீர்வுகள்

  மக்களின் அடிப்படை மற்றும் முக்கிய தேவைகளை நிறைவேற்றக் கூடிய அதிகாரமும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வாக இருக்க முடியும். குறைந்த பட்சம் பல வருடங்களாக அரசியல் தீர்வு தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தினாலே மக்களின் பல தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இவற்றையாவது அரசாங்கம் செய்ய வேண்டும்.