ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலில் இடம்பெற்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 124ஆவது ஜனன தின நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதற்கான பொறுப்பும் அவருடையது என்றும் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற போது, தலைமை பொறுப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடமை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்
Spread the love
Add Comment