ஓய்வூதிய பணத்தினை பெற வங்கிக்கு சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கை சேர்ந்த 81 வயதுடைய ராமன் தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கோண்டாவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து, திருநெல்வேலி பகுதியில் உள்ள மக்கள் வங்கி கிளையில் ஓய்வூதிய பணத்தினை எடுக்க சென்ற வேளை, வங்கியின் முன்பாக பலாலி வீதியை கடக்க முற்பட்ட வேளை, வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதி படுகாயமடைந்தார்.
அவரை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
Add Comment