Home இலங்கை சிறுப்பிட்டியில் இ.போ.ச பேருந்து விபத்து

சிறுப்பிட்டியில் இ.போ.ச பேருந்து விபத்து

by admin

யாழ்ப்பாணத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 ஆம் இலக்க வழித்தட பேருந்து ஒன்றே பருத்தித்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து , வாகன திருத்தகத்தினுள் சென்று விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில், விபத்திற்கு உள்ளான பேருந்தும்,  வாகன திருந்தகத்தினுள் நின்ற வாகனங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினா்   விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More