ஓய்வூப் பெற்ற ஜெனரல் கமால் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை உள்ளிட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய இடங்களை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜேவர்தனவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment