Home இலங்கை பேச்சுவார்த்தையில் தமிழ்த் தரப்புகளின் பொறுப்புப்பற்றிய தமிழ் சிவில் சமூகத்தவர்களின் கரிசனைகள்

பேச்சுவார்த்தையில் தமிழ்த் தரப்புகளின் பொறுப்புப்பற்றிய தமிழ் சிவில் சமூகத்தவர்களின் கரிசனைகள்

by admin


இலங்கைத் தீவின் தேசங்களுக்கு; இடையிலான தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கானபேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. சிறீலங்காவின் ஜனாதிபதி எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதிக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் காணப்போவதாகக் கூறுகின்றார். தமிழர் தரப்போ எவ்வித முன்னாயத்தமோ ஏகோபித்த கொள்கை இணக்கமோஇன்றி பேச்சுவார்த்தைகளில் இணைந்துள்ளது.

சிறீலங்கா இன்று பாரிய பொருளாதாரப் பேரழிவில் சிக்கியுள்ளது. கடந்த எட்டு தசாப்தங்களாக ஏனைய தேசங்களை, குறிப்பாக தமிழ்த்தேசத்தை சிங்களை பௌத்த மேலாதிக்கத்தின் எதிரியாகக் கருதி சிறீலங்கா செயற்;பட்டதன் விளைவு இது. இந்த உண்மையை இன்றுவரை சிங்கள தேசத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ. புத்திஜீவிகளோ, அல்லது மக்களோ வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதில்லை.

உண்மையை ஏற்க மறுத்தாலும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலமே தற்போதைய பொருளாதாரக் கையறு நிலையிலிருந்து மீளலாம் என்ற யதார்த்தம் உறைத்ததனாலேயே பேச்சுவார்த்தைக்கான அழைப்புஅரசுத்தரப்பால் விடப்படுகின்றன. இதுவேஇன்று தமிழர் தரப்புக்கானபலமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை தொடர்பான எமது கரிசனைகளை நாம் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

1. பேச்சுவார்த்தையின் ஒரு தரப்பாக தமிழ்த்தேசத்தை இனவழிப்பு மூலம் அழித்துவிடவும் அதன் இருப்பையும் அடையாளங்களையும் அழிப்பதற்கும்சிறீ லங்கர் என்ற செயற்கையான ஒற்றைத் தேசியத்தினுள் அனைவரது அடையாளங்களையும் கரைத்துவிடுவதற்காக செயற்படுகின்றசிங்கள தேசமும் மறு தரப்பாக இத்தீவின் வடக்கு-கிழக்கைத் தமது மரபுவழித் தாயகமாகக் கொண்டு, அரசியல் கோட்பாட்டினடிப்படையில் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்துகின்ற, அந்த அடையாளத்தை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான போராட்டங்களையும் வீரமும் தியாகங்களும் நிறைந்த விடுதலைப் போரையும் நடாத்திய, எப்போதும் தேர்தல்களில் அதற்கான ஆணைகளை மீள மீள வழங்கி வருகின்ற தமிழ்த் தேசமும் உள்ளன.

2. எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் எந்தத் தரப்புக்கும் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படையான விடயங்கள்; என சில இருக்கும். இனவழிப்பை எதிர்கொள்கின்ற தமிழ்த்தேசத்திற்கு எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாதவை அவர்களின் தேசிய இருப்புக்கான பாதுகாப்பும் தேசிய அடையாளங்களுக்கான பாதுகாப்புமாகும். இத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்த உத்தரவாதங்களைத் தருவதாகவே எப்போதும் இருக்க வேண்டும். இத்தீவின் தேசிய இனப்பிரச்சினை வரலாற்றில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் சிறீ லங்கா அரசு தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டது. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் காலத்தை இழுத்தடிப்பதற்கும், தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதற்கும் அரைகுறைத்தீர்வுகளை திணிப்பதற்கான முயற்சிகளுக்கும்,ஈற்றில் பயனற்ற பேச்சுவார்த்தைகளிலிருந்து தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டு வெளியேறும்போது தமிழர்கள் தீர்வுக்குத் தயாரில்லை என்ற பொய்யை உருவாக்குவதற்காகவுமே சிறீ லங்கா அரசால் பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் மறக்கக் கூடாது.

3. முதலில், பேச்சுவார்த்தைகளுக்கான தெளிவான வழிவரைபடம் ஒன்றை இருதரப்புகளும் இணைந்து தயாரிக்க வேண்டும். இது,பிரதானமாக முக்கிய அடைவுகள், அவற்றுக்கான நேர அட்டவணை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

4. பேச்சுவார்த்தைகள்,இனவழிப்பின் விளைவுகளாக தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள்,இறுதி அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் என இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும்.

5. அன்றாடப்பிரச்சினைகளுக்கான தளத்தில் பின்வருவனவற்றை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பேசப்பட வேண்டும்.

5.1. தமிழர் தாயகத்தில் நடைபெறும் சகல நில அபகரிப்புகளையும் நிறுத்துதலும் காணிகளை மீள வழங்கலும்
5.2. தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையிலான அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடன் நிறுத்துதல்
5.3. சிறைகளிலுள்ள சகல தமிழ் அரசியற் கைதிகளையும் நிபந்தனையற்று விடுவித்தல்
5.4. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணைகளை ஆரம்பித்தல்
5.5. தமிழ்ப்பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளஉள்ளுராட்சி சபைகளுக்கான எல்லை மறுசீரமைப்புகளை மீளப்பெறல்
5.6. தமிழர் தாயத்தின் குடிப்பரம்பலை மாற்றி அமைப்பதற்காக சுதந்திரத்திற்கு முன்பான பொறுப்பாட்சிக் காலத்திலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்டுவருகின்ற குடியேற்றங்களுட்பட அனைத்தையும் நிறுத்துதலும் அகற்றுதலும்

5.7. இராணுவமயமாக்க நீக்கம். உதாரணமாக,தமிழர் தாயகத்தைபெருமெடுப்பில் ஆக்கிரமித்து,தமிழர்களின்; வாழ்வின் சகல அம்சங்களிலும்,முன்பள்ளிகளுட்பட தமிழர்தாயகத்தின் சிவில் நிர்வாக செயற்பாடுகளிலும் சிறீ லங்காவின் முப்படைகளும் செய்துகொண்டிருக்கும் அனைத்துத் தலையீடுகளையும் முழுமையாக நிறுத்துதல்,அவர்களை முகாம்களுக்குள் முடக்குதல் மற்றும் அளவையும் குறைத்தல்
5.8. தமிழர்கள், தமக்காக போராடி உயிர்நீத்தவர்களையும் இனவழிப்பின்போது இறந்த தமது உறவுகளையும் நினைவு கூர்வதற்கான உரிமையை தடுக்காது இருத்தல்,சிறீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் உட்பட தமிழர் சார்பான சகல நினைவுச்சின்னங்களையும் விடுவித்தல், மீள அமைப்பதற்கான தடைகளை நீக்குதல்

5.9. ஈழத்தமிழர்களின் கோரிக்கையான,தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, இனவழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக உடனடியாக சர்வதேச விசாரணைகளை முன்னர் ஒப்புக்கொண்டபடி ஆரம்பிக்க அனுமதித்தல்
5.10. இறுதி அரசியல் தீர்வு எட்டப்படும் வரை தமிழர்கள் தமது தாயகத்தின் அன்றாட அலுவல்களை நடாத்துவதற்காக இடைக்கால நிர்வாகப் பொறிமுறை ஒன்றை அமைத்தல்

இந்தப் பேச்சுவார்த்தைத் தளத்தில்,இவற்றை அமுல்படுத்துவதற்கான கால அட்டவணைகள் பற்றி பேசப்பட வேண்டும். குறுகிய காலத்தில் இவற்றை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை மூலம் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தனது உறுதியையும் நேர்மையையும் தமிழ் மக்களுக்கும் உலகுக்கும் வெளிப்படுத்த முடியும்.

6. இரண்டாவது தளத்தில் இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கான இறுதி அரசியற் தீர்வு நோக்கிப் பேசப்பட வேண்டும். இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் காத்திரமானவையாக இருப்பதாயின் அவை இலங்கையின் தற்போதைய ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அப்பாலான தீர்வை நோக்கியதாக, ஆரம்பத்திலிருந்து இருக்க வேண்டும். 13ம் திருத்தத்தைப்பற்றி பேசுவது, அதன் ‘பிளஸ்’பற்றி பேசுவது,’மேலவை’ பற்றிப் பேசுவது என்று ஒற்றையாட்சி அரசியல் யாப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தைக் கடத்தாது நேரடியாகவே தமிழர்களது அபிலாசைகளான பிரிக்க முடியாத தாயகம், தேசியம், தன்னாட்சி, இறைமை என்பவற்றைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அரசியற் தீர்வின் அடிப்படைகளாக வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவு என்பவற்றின் உள்ளடக்கங்கள் அமைய வேண்டும்.

7. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

8. தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டும் தமிழர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகளில்; கலந்துகொள்வது என்பது கனதியான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் சிறீ லங்காவின் இராஜதந்திர சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கும்போதுமானது அல்ல. தமிழர்கள் பேச்சுவார்ததைகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஆராசனைகள் வழங்குவதற்காக தமக்கென பல்துறைசார் மதியுரைஞர் குழுக்களை (அரசியல் யாப்பு நிபுணர்கள், காணி அபகரிப்புகள் மற்றும் காணிச்சட்டங்கள் தொடர்பான அறிவுடையோர், அரசியல் அறிஞர்கள், பொருளாதார அறிஞர்கள், பல்வேறு துறைகளில் நிர்வாக அனுபவமுடையவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பிராந்திய விடயங்களில் பரீட்சயமுடையவர்கள் என) உருவாக்க வேண்டும். அவர்களைத்தகுந்த சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளில் பொருத்தமான வகையில் இணைத்துக்கொள்வதுடன் அவர்கள் தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

9. சிறீலங்கா அரசுடன் தமிழ் மக்கள் நடாத்தும் எந்தவொரு பேச்சுவார்த்தையும் வெளிப்படைத் தன்மையுடன் நடாத்தப்பட வேண்டும். தமிழர் தரப்பு சார்பாக பங்கேற்பவர்கள்,பேச்சுவார்த்தை பற்றியும்தீர்வுத் திட்டம் தொடர்பாகவும்;தமிழ் மக்களுடன் துணிச்சலான, வெளிப்படையான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக நடாத்தி, இறுதித் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றியமக்களது அபிப்பிராயங்களை பெற்றுக் கொண்டு அவற்றுக்கு ஏற்பத் தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

10. அதே வேளை, சில விடயங்கள் உரிய காலம்வரை பகிரங்கப்படுத்தபட முடியாதவையாக இருக்கும் என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதனால் உருவாக்கப்படுகின்றபல்துறைசார் மதியுரைஞர் குழுக்களுடன் அவ்வாறான விடயங்களுட்பட அனைத்து விடயங்களும் உடனுக்குடன் முழுமையாகப் பகிரப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, கலந்துரையாடப்படுவதன்மூலம்; உரிய தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் தமிழ்த்தரப்பினர், தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களின்போதும்; பேச்சுவார்த்தையின் இறுதியிலும் பேச்சுவார்த்தை மற்றும் அதன் அடைவுகள்; என்பன தொடர்பாகதமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூறல் வேண்டும்.

11. முன்னைய பேச்சுவார்த்தைகளில் இந்தியாவும் ஏனைய சர்வதேச சக்திகளும் எவ்வாறு நடுநிலையோ,நியாயமோ இன்றி தமிழர்களது நலன்களுக்கு எதிராக நடந்து கொண்டன என்பதை நாம் அறிவோம். ஆனாலும் இந்தப் பேச்சுவார்த்தையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் -குறிப்பாக சிறீ லங்காவை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க முன்வரும் நாடுகள்,மத்தியஸ்தம் வகிப்பது நல்லது என்றே நாம் நம்புகின்றோம். ஆனால் அவர்களது மத்தியஸ்தம் தொடர்பான விதிமுறைகள் முற்கூட்டியே உருவாக்கப்படல் வேண்டும். மேலும், இந்நாடுகளுடன் உலகில் இருக்கின்ற பிரபல்யமான,மனச்சாட்சியுள்ள,எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கின்ற, நசுக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுக்கின்ற, அழுத்தங்களுக்கு அடிபணியாத தனிநபர்களுள் சிலராவது மத்தியஸ்தர்களாகவும் கருத்துரைக்கும் பார்வையாளர்களாகவும் பேச்சுவார்த்தையில் இணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

இவை அனைத்துக்;கும் மேலாக, புலம் பெயர் தமிழர்களிடமும் ஏனைய சர்வதேச முதலீட்டாளர்களிடமும் பேச்சுவார்த்தையின் விளைவாக தமிழ் மக்கள் திருப்தியடையும் வகையிலான இறுதித்தீர்வு எய்தப்பட்டு, அது தமிழ் மக்களின் மத்தியில் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு,அவர்களால் ஏற்கப்பட்டு, நடைமுறைக்கு வரும்வரையில் சிறீ லங்கா பயனுறும் வகையிலான முதலீடுகளையோ அல்லது பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீட்கும் நோக்கிலான உதவிகளையோமேற்கொள்ளவேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம். இதேபோல் பேச்சுவார்த்தைகளில் தமிழர்தரப்பாகக் கலந்துகொள்பவர்களும்; இதே கோரிக்கையை புலம்பெயர் தமிழர்களிடமும் சர்வதேச முதலீட்டாளர்களிடமும்பேச்சுவார்த்தைக்கு எம்மை வற்புறுத்துகின்ற சக்திகளிடமும் பகிரங்கமாக வலியுறுத்துதல் வேண்டும்.

தற்போது சிறீ லங்காவை பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீட்பதற்கு உதவ முன்வரும் நாடுகளும் அமைப்புகளும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை பொருளாதார உதவிக்கான முன்னிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். பொருளாதார உதவிகளின் ஒவ்வொரு கட்டமும்பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு அடைவுடனும் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும் என்பதை உதவி வழங்குபவர்கள் சிறீ லங்காவுக்கு கூறுவதுடன் அதையே நடைமுறைப்படுத்தவும் வேண்டும். வரலாற்றில் ஏற்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தை உலகம் சரியாகப் பயன்படுத்துவதாயின் சர்வதேச நாடுகளும் உதவி வழங்கும் நிறுவனங்களும் இதையே செய்ய வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

மேலும் தமிழ்த் தேசத்துடன் பேசுவது போலவே இத்தீவில் வாழும் முஸ்லிம்கள் மலையகத் தமிழர்கள் பறங்கியர், மலாயர் போன்ற சமூகங்களுடனும் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை நடாத்துவதுடன் ஏனைய சமூகங்களுக்கு எதிராக இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள பௌத்த-சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கெதிரான முழுமையான நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நாம் சிறீ லங்கா அரசிடம் வலியுறுத்துகின்றோம்.

இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புகள்:
• சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு
• நியு சன் விளையாட்டு கழகம்
• புழுதி – சமூக உரிமைகளுக்கான அமைப்பு
• அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு
• தளம்
• தமிழ் சட்டத்தரணிகள் பேரவை
• யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
• யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
• நீதி சமாதான ஆணைக்குழு, யாழ்ப்பாண மறை மாவட்டம்
• நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள் துறவிகள் – வடக்கு கிழக்கு
• குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம்,
• அடையாளம் – கொள்கை ஆய்வுக்கான நிலையம்
• கிராமிய உழைப்பாளர் சங்கம்
• மறைநதி கத்தோலிக்க தொடர்பூடக மையம், யாழ்ப்பாண மறை மாவட்டம்
• சுயம்பு – கலை பண்பாட்டு செயல்திறன் மையம், யாழ்ப்பாணம்
• P2P மக்கள் இயக்கம்
• தமிழ் சிவில் சமூக அமையம்
• மலையக சமூக விஞ்ஞான ஆய்வு மையம்.
• சமூக விஞ்ஞான ஆய்வு மையம்.
• சமூக அபிவிருத்திக்கான செயற்பாட்டு மையம்.
• மலையகத் தமிழர் பண்பாட்டுப் பேரவை
• குரலற்றவர்களின் குரல்
• வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வடக்கு கிழக்கு
• யாழ் மாவட்ட பெண்கள் சமாசம்
• அக்கினிச் சிறகுகள்.
• இலங்கை பல்சமய கருத்தாடல் நிலைய சகவாழ்வு சங்கம், யாழ்ப்பாணம்
• ஊநவெசந கழச யுஉஉநளளiடிடைவைல ஆழnவைழசiபெ ஐகெழசஅயவழைn னுளையடிடைவைல. டீயவவiஉயடழய

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்:
1. தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம்
2. ஆயர் P. கு. இம்மானுவல் .பெர்னான்டோ ஆயர் மன்னார்
3. ஆயர் நோயல் இமானுவல் பேராயர், திருகோணமலை
4. தவத்திரு வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம்
5. திருவருட்பணி செல்வன் நல்லூர்
6. அருட்பணி மோகன் ராம்கீ
7. அருட்பணியாளர் ஜுட் சுதர்சன்
8. அருட்பணி கந்தையா ஜெகதாஸ்
9. அருட் சகோதரி சோ. நிக்கோலா
10. அருட்பணியாளர் ப. யோ. ஜெபரட்ணம் குருமுதல்வர், யாழ். மறைமாவட்டம்
11. அருட்பணியாளர் கி. ஜெயக்குமார் மறைக்கோட்ட முதல்வர், இளவாலை
12. அருட்பணியாளர் ஜெயபாலன் குறூஸ் மன்னார் மறைமாவட்டம்
13. அருட்பணியாளர் அகஸ்ரின் புஸ்பராஜா மன்னார் மறைமாவட்டம்
14. அருட்பணியாளர் அருளானந்தம் யாவிஸ் பங்குத்தந்தை, குருநகர்
15. அருட்பணியாளர் வசந்தன் பங்குத்தந்தை, நெடுந்தீவு
16. அருட்பணியாளர் ஸ்ரிபன் யாழ்ப்பாணம்
17. அருட்பணியாளர் றோகான் கிளரீசியன் சபை
18. அருட்பணியாளர் எழில்ரஜன் அயர்லாந்து
19. அருட்பணியாளர் லியோ ஆம்ஸ்ரோங் யாழ். மறைமாவட்டம்
20. அருட்பணியாளர் தே. ரவிராஜ் விரிவுரையாளர், சவேரியார் குருத்துவக் கல்லூரி, யாழ்ப்பாணம்
21. அருட்பணியாளர் மங்களராஜா, விரிவுரையாளர், சவேரியார் குருத்துவக் கல்லூரி, யாழ்ப்பாணம்
22. அருட்பணியாளர் அ. ஜஸ்ரின், விரிவுரையாளர், சவேரியார் குருத்துவக் கல்லூரி, யாழ்ப்பாணம்
23. அருட்பணியாளர் றெக்ஸ் சவுந்தரா, பங்குத்தந்தை, மானிப்பாய்
24. அருட்பணியாளர் ம. வி. இ. இரவிச்சந்திரன், விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
25. அருட்பணியாளர் ரெறன்ஸ் பெர்னாண்டோ, கொழும்பு மறைமாவட்டம்
26. அருட்பணியாளர் ஸேராட் ஜயவர்த்தன, கொழும்பு மறைமாவட்டம்
27. அருட்பணியாளர் நந்தன சப்ரமாது கொழும்பு மறைமாவட்டம்
28. N. அபிலாஷ; குடிமகன்
29. சி. அபிநயா சமூக செயற்பாட்டாளர்
30. அ. அபிராஜ் சமூகப் பிராணி
31. ஐங்கரன் தழிழரசன் ஊடகவியலாளர்
32. ச. அஜிதா சமூக செயற்பாட்டாளர்
33. அஜித்குமார் விiயாட்டுக் கழகம்
34. அம்பிகா ராஜசேகரம் பெண் சமூக செயற்பாட்டாளர்
35. ஆனந்தி பெண் சமூக செயற்பாட்டாளர்
36. ஏஞ்சல் டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
37. கு. அனித்தா முன்பள்ளி ஆசிரியர்
38. அனித்தா டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
39. அனட் நிலுக்சி கிறிஸ்டி சட்டத்தரணி
40. அனோஜன் சமூக செயற்பாட்டாளர்
41. த. அன்பழகன் சமூகப் பிராணி
42. அனுஜா இராசநாயகம் சட்டத்தரணி
43. அனுசாயா சமூக செயற்பாட்டாளர்
44. க. அனுஷh பெண் சமூக செயற்பாட்டாளர்
45. அனுஷhனி அழகராஜ் சமூக செயற்பாட்டாளர்
46. அனுசாந்த் சமூக செயற்பாட்டாளர்
47. சி. அனுசியா பெண் உரிமை செயற்பாட்டாளர்
48. இ. அனுசியா பெண் சமூக செயற்பாட்டாளர்
49. அப்பொலி அன்ரனி ஜெராட் பாலேந்திரன் சமூக நலன்விரும்பி
50. ஆரியரெட்ணம் வில்பிரட் அர்ஜுன் சட்டத்தரணி
51. அரியதாஸ் சத்தியானந்தி ஆசிரியர்
52. அருள் வசந்தன் சமூக செயற்பாட்டாளர்
53. அருளம்மா சமூக செயற்பாட்டாளர்
54. பி. அருள்தாஸ் சமூகப் பிராணி
55. அருள்தாஸ் சமூக செயற்பாட்டாளர்
56. அருள்வதனா பெண் உரிமை செயற்பாட்டாளர்
57. அருட்பிரகாசம் நிரோசன் சட்டத்தரணி
58. அஸ்விக்கா சமூக செயற்பாட்டாளர்
59. வி. ஆதினா பெண் சமூக செயற்பாட்டாளர்
60. ப. ஆதித்யா பெண் சமூக செயற்பாட்டாளர்
61. அழகரெத்னம் கீர்த்தனா சட்டத்தரணி
62. பே. பபிதா பெண் சமூக செயற்பாட்டாளர்
63. பாபு கஜேந்தினி பெண் சமூக செயற்பாட்டாளர்
64. பேபிலைலா பெண் சமூக செயற்பாட்டாளர்
65. ஆ. பகீரதன் சமூக செயற்பாட்டாளர்
66. சா. பஜீனா பெண் சமூக செயற்பாட்டாளர்
67. பாலா சமூக செயற்பாட்டாளர்
68. பாலபாஸ்கரன் சுதர்சன் சட்டத்தரணி
69. பாலசிங்கம் மதுசாளினி பல்கலைக்கழக மாணவி
70. பானுமதி அரவிந்தன் பெண் சமூக செயற்பாட்டாளர்
71. ம. பானுசா பெண் சமூக செயற்பாட்டாளர்
72. மு. பரத் சமூக செயற்பாட்டாளர்
73. அ. பஸ்நா சமூக செயற்பாட்டாளர்
74. ளு. பவானந்தராஜா வங்கி முகாமையாளர்
75. சி. பீஷ;மன் சமூக செயற்பாட்டாளர்
76. பிருந்தன் சமூக செயற்பாட்டாளர்
77. பிஸ்லியா புகுடோ மனித உரிமை செயற்பாட்டாளர்
78. கரோலின் சமூக செயற்பாட்டாளர்
79. சந்திரா பெண் சமூக செயற்பாட்டாளர்
80. ஊ. சந்தரகுமார் பயிற்றுவிப்பாளர்
81. கா. சந்திரவதனி பெண் சமூக செயற்பாட்டாளர்
82. சித்ரா ஆசிரியர்
83. சித்ரா மோகன் பெண் சமூக செயற்பாட்டாளர்
84. சித்ரா விஜயகுமார் பெண் சமூக செயற்பாட்டாளர்
85. சித்ரவேல் கணேசன் ஆசிரியர்
86. சித்திரவேல் தயாபரன் அதிபர்
87. கிறிஸ்டின் ஜெயசீலன் ஒகஸ்டா லிமா குடிமகன்
88. ம. கிரேசியன் சட்டத்தரணி
89. சு. டெய்சி பெண் சமூக செயற்பாட்டாளர்
90. ரு. ஆ. டயாளினி பெண் சமூக செயற்பாட்டாளர்
91. டி. ஜோ. டியூக் சட்டத்தரணி
92. டிபினா பெண் சமூக செயற்பாட்டாளர்
93. டு. டிலக்சன் மாணவன்
94. டிலான் குடிமகன்
95. தினேஸ் சமூக செயற்பாட்டாளர்
96. டினோயா சமூக செயற்பாட்டாளர்
97. எல்சன் பிறிமானந்த் ஜேசுதாசன் சமூக செயற்பாட்டாளர்
98. ஈஸ்வரி செல்வகுமார் பெண் சமூக செயற்பாட்டாளர்
99. எயிலோஸ் டீன்குமார் சுhரதி
100. ம. பாத்திமா பர்ணா பெண் உரிமை செயற்பாட்டாளர்
101. பேராசிரியர்மு. வு. கணேலிங்கம் அரசறிவியல் துறை
102. க. கணேஸ்வரன் சட்டத்தரணி
103. பேராசிரியர் ந. கங்காதரன் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடம்
104. ஞானேஸ்வரராசா நிரோஜன் மாணவன்
105. கோபி மாதர் சங்க உறுப்பினர்
106. கோபிதா மனோகரன் சட்டத்தரணி
107. மு. கோபிகரன் தனியார் துறை
108. கௌரி பெண் சமூக செயற்பாட்டாளர்
109. கௌரி ஜெயசுந்தரம் பெண் சமூக செயற்பாட்டாளர்
110. குணதாச பிரஷhந் சிவில் சமூக செயற்பாட்டாளர்
111. ஹக்கீம் அஸ்வர் செயற்பாட்டாளர்
112. த. இலக்கியா பெண் சமூக செயற்பாட்டாளர்
113. இளமுருகநாதன் கேஷpஹன் பல்கலைக்கழக மாணவன்
114. இளையதம்பி புவனேஸ்வரி குடிமகன்
115. இளையதம்பி திருஞானசுந்தரம் வியாபாரம்
116. ளு. இன்பரூபன் சமூக செயற்பாட்டாளர்
117. ம. இந்திராணி பெண் உரிமை செயற்பாட்டாளர்
118. இஸ்மயில் ஆயிஷh பாணு குடிமகன்
119. ம. யமுனா பெண் சமூக செயற்பாட்டாளர்
120. கி. ஜானகி பெண் சமூக செயற்பாட்டாளர்
121. ச. ஜனார்த்தனன் சமூக செயற்பாட்டாளர்
122. ஆ.ஆ. ஜன்சிலா பெண் சமூக செயற்பாட்டாளர்
123. லு. யதுசன் மாணவன்
124. அருட்பணி ஜெகதாஸ் குடிமகன்
125. ப. ஜெகதீஸ்வரன் குடிமகன்
126. க. ஜெக்கா பெண் சமூக செயற்பாட்டாளர்
127. யேமிகா பொன்னுத்துரை பல்கலைக்கழக மாணவி
128. க. ஜெனிதா பெண் சமூக செயற்பாட்டாளர்
129. ஜோ. ஜெஸ்ரின் பெண் சமூக செயற்பாட்டாளர்
130. ஆ. ஜெயபால் அபிவிருத்தி உத்தியோகத்தர்
131. ஜெயலட்சுமி ஜெகநாதன் பெண் சமூக செயற்பாட்டாளர்
132. ஜெயம் சுதன் மாணவன்
133. ஜெயமதி தனராஜ் பல்கலைக மாணவி
134. சு. ஜெயந்தா பெண் சமூக செயற்பாட்டாளர்
135. ஜெயந்தா சுரேஸ் குடிமகன்
136. ப. ஜெயந்தி பெண் சமூக செயற்பாட்டாளர்
137. ஜெயந்தி சுந்தராஜி பெண் சமூக செயற்பாட்டாளர்
138. ஜெயந்தினி பெண் சமூக செயற்பாட்டாளர்
139. ஜெயராம் கேதீஸ்வரன் பந்தல் உரிமையாளர்
140. ஜெயரெட்ணம் கிருஷhந் சுயாதீன சமூக செயற்பாட்டாளர்
141. ஜெயசங்கர் மதுரா பெண் சமூக செயற்பாட்டாளர்
142. ஜெயசிங்கம் ஜெயரூபன் சட்டத்தரணி
143. இ. ஜெயசுதா பெண் சமூக செயற்பாட்டாளர்
144. செ. ஜெயவதனி பெண் சமூக செயற்பாட்டாளர்
145. சி. ஜெயிதா பெண் சமூக செயற்பாட்டாளர்
146. ஜொன டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
147. சி.அ. யோதிலிங்கம் அரசியல் ஆய்வாளர்
148. யூட் சமூக ஆர்வலர்
149. ம. யூட் டினேஸ் சட்டத்தரணி
150. எ. யூலியட் பெண் உரிமை செயற்பாட்டாளர்
151. ஜஸ்டின் சிவில் சமூக செயற்பாட்டாளர்
152. கபிலன் மாணவன்
153. கைலாயபெருமாள் கம்சாஜினி மாணவி
154. கஜன் மின் இணைப்பாளர்
155. கஜேந்திரன் சுயதொழில் முயற்சியாளன்
156. கலைச்செல்வி குடிமகன்
157. கி. கலைவாணி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
158. சு. கலைவேந்தன் சிவில் சமூக செயற்பாட்டாளர்
159. கா. கலையமுதன் சமூகப் பிராணி
160. கலாதர்சினி ஜோர்ஜ் வொசிங்டன் குடிமகன்
161. ளு. கலாவதி உறுப்பினர், யாழ் மாவட்ட பெண்கள் சமாசம்
162. கலோசியோன் பிரசாந்தி சமூக விரும்பி
163. கல்பனா பெண் சமூக செயற்பாட்டாளர்
164. சி. கமலகாந்தன் சமூக செயற்பாட்டாளர்
165. க. கமலாதேவி பெண் சமூக செயற்பாட்டாளர்
166. வ. கமவேந்தினி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
167. சி. கம்சா பெண் சமூக செயற்பாட்டாளர்
168. கனகசபை தேவகடாட்சம் ஓய்வு பெற்ற கிராமசேவையாளர்
169. கனகராஜ் சசிரேகா சட்டத்தரணி
170. கணபதிப்பிள்ளை குமணன் ஊடகவியலாளர்
171. மு. காண்டீபன் சிவில் சமூக செயற்பாட்டாளர்
172. சி. காஞ்சனா பெண் சமூக செயற்பாட்டாளர்
173. கந்தையா தவராஜா சட்டத்தரணி
174. ;கந்தசாமி ஜெயசீலன் குடிமகன்
175. கந்தசாமி ஜெய்சங்கர் சுகாதார பரிசோதகர்
176. கார்த்தி டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
177. கார்த்தி கயன் ஊடகவியலாளர்
178. கார்த்திகா சமூக செயற்பாட்டாளர்
179. கார்திகா சுவேந்திரநாதன் குடிமகன்
180. க. கார்த்தினி பெண் சமூக செயற்பாட்டாளர்
181. காருண்யா சமூக செயற்பாட்டாளர்
182. வு. காசேந்திரன் மனித உரிமைச்செயற்பாட்டாளர்
183. கவிதா பெண் சமூக செயற்பாட்டாளர்
184. கவிதா காந்தன் பெண் சமூக செயற்பாட்டாளர்
185. மு. கவிவரன் மாணவன்
186. கீதா பெண் சமூக செயற்பாட்டாளர்
187. வி. கேசவன் சிவில் சமூக செயற்பாட்டாளர்
188. சி. கேசவன் குடிமகன்
189. கேஷpகன் இளமுருகநாதன் சமூக செயற்பாட்டாளர்
190. ஆ. கேசிகா பெண் சமூக செயற்பாட்டாளர்
191. கேதீஸ்வரன் பந்தல் உரிமையாளர்
192. கேதிகா சிவில் சமூக செயற்பாட்டாளர்
193. கிருபாகரி பெண் சமூக செயற்பாட்டாளர்
194. கோபாலசிங்கம் கோவூரன் விற்பனை பிரதிநிதி
195. மு. கோமகன் சிவில் சமூக செயற்பாட்டாளர்
196. கி. கோமாவதி பெண் சமூக செயற்பாட்டாளர்
197. கோணமலை மதனகோபி விவசாயி
198. சி. கோணேசலிங்கம் விவசாயி
199. மு. கோவலன் குடிமகன்
200. சி. கௌசலா சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
201. கௌசி டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
202. யு. கோயலீலீ பெண் சமூக செயற்பாட்டாளர்
203. வு. கிரிசாந்த் குடிமகன்
204. கிருஸ்ணா மணிமாறன் பெண் சமூக செயற்பாட்டாளர்
205. க. குலகௌரி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
206. கு. குலமணி பெண் சமூக செயற்பாட்டாளர்
207. குழந்தைவேல் ஜெகநீதன் தாதிய உத்தியோகத்தர்
208. குமணன் கணபதிப்பிள்ளை குடிமகன்
209. குமார் சிவில் சமூக செயற்பாட்டாளர்
210. வி. குமாரசாமி எழுத்தாளர்
211. னுச.சி. குமரவேள் வைத்திய அதிகாரி
212. குவேதன் அபிவிருத்தி உத்தியோகத்தர்
213. னுச. பூ. லக்ஷமன் இருதய வைத்திய நிபுணர்
214. லக்ஷ;னி தேவதாஸ் சட்டத்தரணி
215. லக்சுமி வசந்தன் பெண் சமூக செயற்பாட்டாளர்
216. லலிதா சிவில் சமூக செயற்பாட்டாளர்
217. இ. லலிதாராணி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
218. லதா சுப்ரமணியம் பெண் சமூக செயற்பாட்டாளர்
219. லாவண்யா துரைரட்ணம் குடிமகன்
220. சி. லெட்சுமிராணி பெண் சமூக செயற்பாட்டாளர்
221. லிங்கராசா தினேஸ் வங்கி அலுவலகர்
222. லோகேந்திரராசா யசு சட்டத்தரணி
223. மகாலக்ஸ்மி குருசாந்தன் பெண் சமூக செயற்பாட்டாளர்
224. மு. மகேந்திரன் ஓய்வுபெற்ற அதிபர்
225. மகேந்திரன் நிர்மலா பெண் சமூக செயற்பாட்டாளர்
226. ர. மகிழினி பெண் சமூக செயற்பாட்டாளர்
227. ஆ. மாலினி பெண் சமூக செயற்பாட்டாளர்
228. கு. மல்லிகா சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
229. மாமாங்கம் ஜீவராஜ் தாதியர் உத்தியோகத்தர்
230. மஞ்சு டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
231. ளு. மஞ்சுளாதேவி பெண் சமூக செயற்பாட்டாளர்
232. ஆ. மங்கை பெண் சமூக செயற்பாட்டாளர்
233. மனோஜ் சமூக செயற்பாட்டாளர்
234. மனோஜ் பிரபாகர் சமூக நலன் விரும்பி
235. மரியாம்பிள்ளை செல்வின் இறேனியஸ் சமூக செயற்பாட்டாளர்
236. சி. மரியறோசரி பெண் சமூக செயற்பாட்டாளர்
237. சி. மரியரோசி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
238. மரியதாஸ் அரியதாஸ் சேவைக்கால ஆலொசகர்
239. மர்லின் வேணுஜா யோசப் எனோசன் குடிமகன்
240. மதன் சிவில் சமூக செயற்பாட்டாளர்
241. கு. மாதவி பெண் சமூக செயற்பாட்டாளர்
242. N. மதிவதன் சட்டத்தரணி
243. ந. மதிவதனி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
244. கோ. மதுரிக்கா பெண் சமூக செயற்பாட்டாளர்
245. மயிலரசி பெண் சமூக செயற்பாட்டாளர்
246. மயில்வாகனம் திபாகரன் வியாபாரம்
247. மேகராசா திவ்யநாதன் ஆசிரியர்
248. மேனகா பெண் சமூக செயற்பாட்டாளர்
249. மிதுன்ராஜ் சமூக செயற்பாட்டாளர்
250. N. மோகன் சட்டத்தரணி
251. மோகன் சிவில் சமூக செயற்பாட்டாளர்
252. முருகுபிள்ளை கிருபாகரன் சுகாதார பரிசோதகர்
253. முருகுப்பிள்ளை தவயோகராஜா அபிவிருத்தி உத்தியோகத்தர்
254. முத்துலிங்கம் ஜனனன் பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்
255. முத்துலிங்கம் புலேந்திரகுமார் மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்
256. மு. மைதிலி பெண் சமூக செயற்பாட்டாளர்
257. நடராஜா கிருஷ;ணமூர்த்தி நிர்வாக உதவியாளர்
258. நடராஜா சிவரஞ்சித் சட்டத்தரணி
259. நாகையா சிவில் சமூக செயற்பாட்டாளர்
260. நாகலிங்கம் புஸ்பராஜ் தாதிய உத்தியோகத்தர்
261. நாகராஜ் குபேந்திரன் குடிமகன்
262. பி. நளினா சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
263. சே. நளினா பெண் சமூக செயற்பாட்டாளர்
264. நல்லதம்பி புஸ்பராஜா குடிமகன்
265. நல்லையா வினோதன் அபிவிருத்தி உத்தியோகத்தர்
266. நந்தினி சிவில் சமூக செயற்பாட்டாளர்
267. நர்சிக்கன் சிவில் சமூக செயற்பாட்டாளர்
268. நவலக்சன் மாணவன்
269. ந. நவபிரேமவாணி தன்னார்வலர்
270. நவரெத்தினம் கமலதாஸன் சட்டத்தரணி
271. நவரத்தினம் நந்தரூபன் பொறியியலாளர்
272. நவரெட்ணம் தமிழினியன் சட்டத்தரணி
273. வி. நவீன் சமூகப் பிராணி
274. ச. நிகலா சமூக செயற்பாட்டாளர்
275. நிலாந்தன் பத்தி எழுத்தாளர்
276. ஏ. ளு. நிறைஞ்சன் சட்டத்தரணி
277. நிறஞ்சினி உள வள ஆலோசகர்
278. ம. நிர்மலா பெண் சமூக செயற்பாட்டாளர்
279. நிர்மலன் வீடியோ தொகுப்பாளர்
280. நிரோஜன் சிவில் சமூக செயற்பாட்டாளர்
281. வி. நிரோஜினி பெண் சமூக செயற்பாட்டாளர்
282. கு. நிரூபன் சமூக செயற்பாட்டாளர்
283. நிசா டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
284. ர. நிஷh பெண் சமூக செயற்பாட்டாளர்
285. நிசாந்தன் சமூக செயற்பாட்டாளர்
286. ளு.பு. நிஷhந்தினி குடிமகன்
287. நிசாந்தி பிரமோத்யா குடிமகன்
288. அ. நித்தியா பெண் சமூக செயற்பாட்டாளர்
289. ஜீ. நித்தியகலா பெண் சமூக செயற்பாட்டாளர்
290. நிதுஷh சிறுவர் கழகம்
291. பாலிப்போடி உதயகுமார் ஆதிபர்
292. பரமேஸ்வரி தியாகம் பெண் சமூக செயற்பாட்டாளர்
293. பார்வதி மாரிமுத்து பெண் சமூக செயற்பாட்டாளர்
294. பத்திநாதன் மரிய சுலோஜன் சட்டத்தரணி
295. பத்திநாதர் அன்டன் புனிதநாயகம் சட்டத்தரணி
296. பத்மநாதன் செய்தி வாசிப்பாளர்
297. பா. பத்மாதேவி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
298. லு. ஆ. பட்றிக் பிரதீபன் வியாபாரம்
299. போல் அருள் வந்தனா பெண் சமூக செயற்பாட்டாளர்
300. ஆ. போல்ராஜ் மாணவன்
301. செ. பவளவள்ளி அரசியல் கைதியின் தாய்
302. னு. பவிகரன் மாணவன்
303. பேர்ள் தர்ஷh பெஞ்சமின் சட்டத்தரணி
304. க. பிரதீபன் சமூக செயற்பாட்டாளர்
305. மு. பிரதீபன் ஆசிரியர்
306. வு. பிரசாந்தராஜ் சமூக செயற்பாட்டாளா
307. பிரதாப் சமூக செயற்பாட்டாளர்
308. சு. பிரவீன் காப்புறுதி நிறுவனம்
309. பிரீடா சமூக செயற்பாட்டாளர்
310. ப்ரீத்தா உமாபாலன் சமூக செயற்பாட்டாளர்
311. னுச. சு. பிரேமகிருஸ்ணா உணர்வழியியல் வைத்திய நிபுணர்
312. ர. பிறேமளா பெண் சமூக செயற்பாட்டாளர்
313. பே. பிரேம்நாத் சட்டத்தரணி
314. பிரியா டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
315. பிரியா ஆசிரியர்
316. அ. பிரியங்கா பெண் சமூக செயற்பாட்டாளர்
317. N. பிரியசகானுஜன் சமூக செயற்பாட்டாளர்
318. புள்ளநாயகம் சந்திரசேகரன் சமூக செயற்பாட்டாளர்
319. புனிதசுந்தரம் சிவபிரியன் அலுவலக உதவியாளர்
320. புஷ;பமலர் பெண் சமூக செயற்பாட்டாளர்
321. புஸ்பவள்ளி வீரையா பெண் சமூக செயற்பாட்டாளர்
322. வி. புவிதரன் ஜனாதிபதி சட்டத்தரணி
323. றேச்சள் சகாயநாதன் சட்டத்தரணி
324. ரகிவன் சிவில் சமூக செயற்பாட்டாளர்
325. கா. ராகினி பெண் சமூக செயற்பாட்டாளர்
326. சி. ரகுந்தினி பெண் சமூக செயற்பாட்டாளர்
327. ராஜன் மின் இணைப்பாளர்
328. கெ. ராஜவதி பெண் சமூக செயற்பாட்டாளர்
329. இராஜேந்திரன் ஆதீஷன் சமூக செயற்பாட்டாளர்
330. திருமதி. ஊ. ராஜேஸ்வரன் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்
331. சு. ராஜேஸ்வரன் சமூக ஆர்வலர்
332. டீ. றாஜி பெண் சமூக செயற்பாட்டாளர்
333. ளு. றாஜினி பெண் சமூக செயற்பாட்டாளர்
334. பி. றஜித்தா பெண் சமூக செயற்பாட்டாளர்
335. ராஜ்குமார் சஜிந்தன் குடிமகன்
336. ளு. ராஜு வியாபாரம்
337. ரா. ராகினி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
338. ர. றகிதா பெண் சமூக செயற்பாட்டாளர்
339. ளு. ராம் மாணவன்
340. சு. ரமேஸ் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்
341. த. ரமேஷ; அதிபர்
342. ரம்யா விஜயகுமரன் கிழக்கு பல்கலைக்கழகம்
343. ரங்கநாயகி பரமசிவம் பெண் சமூக செயற்பாட்டாளர்
344. ர. ரணிபா பெண் சமூக செயற்பாட்டாளர்
345. ஊ. ரணிதா ஞானராஜ் சட்டத்தரணி
346. க. றஞ்சினி பெண் சமூக செயற்பாட்டாளர்
347. யு. றஞ்சினி பெண் சமூக செயற்பாட்டாளர்
348. ஜெ. ரஞ்சினி பெண் சமூக செயற்பாட்டாளர்
349. இரஞ்சினிதேவி பெண் சமூக செயற்பாட்டாளர்
350. இராசையா இளங்குமரன் சட்டத்தரணி
351. ராசலிங்கம் விக்னேஸ்வரன் செயற்பாட்;டாளர்
352. இரத்தினலீலா பெண் சமூக செயற்பாட்டாளர்
353. பா. இரத்தினேஸ்வரி பெண் சமூக செயற்பாட்டாளர்
354. மு.ளு. ரட்ணவேல் சட்டத்தரணி
355. இ. ரவீந்திரன் கணித ஆசிரியர்
356. ரவிராஜ் ரமணா சட்டத்தரணி
357. த. இரவிவர்மன் சிரேஷ;ட ஊடகவியலாளர்
358. றீனா பெண் சமூக செயற்பாட்டாளர்
359. N. ரெமோன் முகாமைத்துவ உதவியாளர்
360. ஜெ. றோபிதா பெண் சமூக செயற்பாட்டாளர்
361. வு. றோகன் மாணவன்
362. சு. றோமியா பெண் சமூக செயற்பாட்டாளர்
363. றொசாணி டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
364. சு. ரூபா பெண் சமூக செயற்பாட்டாளர்
365. க. ரூபதி பெண் சமூக செயற்பாட்டாளர்
366. அ. ருவனியா பெண் சமூக செயற்பாட்டாளர்
367. சபாரெத்தினம் சிவயோகநாதன் குடிமகன்
368. சைலா பெண் சமூக செயற்பாட்டாளர்
369. ம. சைலா பெண் சமூக செயற்பாட்டாளர்
370. சஜி டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
371. மு. சங்கமதி பெண் சமூக செயற்பாட்டாளர்
372. சங்கீத் பெண் சமூக செயற்பாட்டாளர்
373. வி. சங்கீதா பெண் சமூக செயற்பாட்டாளர்
374. சஞ்சிகா திருச்சபேசன் ஆசிரியர்
375. சந்ததேவி பெண் சமூக செயற்பாட்டாளர்
376. கி. சாந்தாதேவி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
377. சி. சரஸ்வதி பெண் சமூக செயற்பாட்டாளர்
378. சரஸ்வதி செல்வராஜ் பெண் சமூக செயற்பாட்டாளர்
379. சரோஜா பெண் சமூக செயற்பாட்டாளர்
380. செ. சசிகாந் ஆசிரியர்
381. ளு. சசிகுமார் ஆசிரியர்
382. ப. சசிஸ்காந்த் சமூக செயற்பாட்டாளர்
383. ளு. சசிதரன் ஆசிரியர்
384. சதியா தவச்செல்வன் குடிமகன்
385. சீனித்தம்பி ஜெயக்குமார் ஓய்வு பெற்ற அதிபர்
386. சீதராமன் பாடகர்
387. செலஷ;டா சமூக செயற்பாட்டாளர்
388. செலின்ரா சமூக செயற்பாட்டாளர்
389. செல்வநாயகம் அரவிந்தன் ஃ ஆனந்தவர்ணன் சமூக செயற்பாட்டாளர்
390. செல்வநாயகம் ரவிசாந் ஊடகவியலாளர்
391. லெ;வநாயகம் கிரிசாந் ஊடகவியலாளர்
392. செல்வராசா சமூக செயற்பாட்டாளர்
393. த. செல்வி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
394. பா. செந்தில்குமரன் குடிமகன்
395. ஷhஜினி இரவிச்சந்திரன் சமூக செயற்பாட்டாளர்
396. ர. சாளினி பெண் சமூக செயற்பாட்டாளர்
397. திருமதி. ச. சண்;முகநாதன் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்
398. சண்முகநாதன் ஜெயறொஸ்மன் கேதீஸ் குடிமகன்
399. அ. சர்மிளா சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
400. ம. சர்மிளா பெண் சமூக செயற்பாட்டாளர்
401. ளு. சியாம் சமூக செயற்பாட்டாளர்
402. ஷேhபனா பெண் சமூக செயற்பாட்டாளர்
403. பொ. ந. சிங்கம் சமூக செயற்பாட்டாளர்
404. சின்னத்துரை ஜெகன் சட்டத்தரணி
405. சின்னத்தம்பி திருநவன் சுகாதார பரிசோதகர்
406. சிந்து பெண் சமூக செயற்பாட்டாளர்
407. சிந்துஜா சமூக விரும்பி
408. பி. சிந்துஜா பெண் சமூக செயற்பாட்டாளர்
409. சிந்துஜா மகேஸ்வரன் சமூக செயற்பாட்டாளர்
410. வு. சிந்துஜன் ஆசிரியர்
411. ப. சிந்துஜன் சமூக செயற்பாட்டாளர்
412. சிவாஜினி பெண் சமூக செயற்பாட்டாளர்
413. சிவகஜன் சட்டத்துறை மாணவன்
414. க. சிவகலா பெண் சமூக செயற்பாட்டாளர்
415. சி. சிவகாந்தன் விரிவுரையாளர் கலைப் பீடம்
416. சிவம் பிரபா சமூக செயற்பாட்டாளர்
417. க. சிவமங்கை சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
418. சிவானந்தராஜா குடிமகன்
419. னுச.சி. சிவன்சுதன் பொது வைத்திய நிபுணர்
420. த. சிவரூபன் சமூக செயற்பாட்டாளர்
421. சிவசங்கீர்த்தன் சமூக செயற்பாட்டாளர்
422. சி. சியாழினி பெண் சமூக செயற்பாட்டாளர்
423. நி. சியானாநியாஸ் சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
424. வ. சோபிதா பெண் சமூக செயற்பாட்டாளர்
425. ளு. சோதிநாயகம் முகாமையாளர்
426. யு. சௌந்தரராஜா சட்டத்தரணி
427. னுச. யு. சரவணபவன் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடம்
428. சிறிபாலன் ஜென்சி குடிமகன்
429. ஸ்ரீதேவி மங்கலம் பெண் சமூக செயற்பாட்டாளர்
430. ஸ்ரீநாகரூபன் பதுஜன் குடிமகன்
431. சிறிசரவணபவன் தினேஸ்குமார் ஆசிரியர்
432. னுச. வி. சிறீதரன் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடம்
433. வு. சுபா பெண் சமூக செயற்பாட்டாளர்
434. ப. சுபேதினி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
435. சுப்ரமணியம் சுரேஸ்குமார் ஆசிரியர்
436. சு. சுகன்யா பெண் சமூக செயற்பாட்டாளர்
437. சுஜீவன் மென் பொருள் உற்பத்தியாளர்
438. சுஜிவன் தர்மரெத்தினம் செயற்பாட்டாளர்
439. மு. சுஜி சமூக செயற்பாட்டாளர்
440. சுஜித் பணியாளர்
441. அ. சுஜித்ரா சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
442. சி. சுகிலதா பெண் சமூக செயற்பாட்டாளர்
443. சி. சுலோசனா பெண் சமூக செயற்பாட்டாளர்
444. சு. சுலோசனா பெண் சமூக செயற்பாட்டாளர்
445. றி. சுமலதா பெண் சமூக செயற்பாட்டாளர்
446. அ. சுமதி பெண் சமூக செயற்பாட்டாளர்
447. ம. சுமாவதி பெண் சமூக செயற்பாட்டாளர்
448. சுந்தரலிங்கம் நிலானி சட்டத்தரணி
449. ளு. சுரேஸ் ஆசிரியர்
450. னுச. கு. சுரேஸ்குமார் பெண்நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர்
451. ச. சுரேஸ்குமார் சமூக செயற்பாட்டாளர்
452. சுசிலா கதிரேசன் பெண் சமூக செயற்பாட்டாளர்
453. சுசீந்திரன் ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கி
454. இ. சுதா டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
455. சுதாகர் சமூக செயற்பாட்டாளர்
456. அ. சுதாகரி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
457. சுதன் மாணவன்
458. சுதந்தினி சமூக செயற்பாட்டாளர்
459. வி. சுதர்சினி பெண் சமூக செயற்பாட்டாளர்
460. சுவேனி சமூக செயற்பாட்டாளர்
461. பா. சுவேந்தினி பெண் சமூக செயற்பாட்டாளர்
462. தாட்சாயினி பெண் சமூக செயற்பாட்டாளர்
463. தம்பிப்போடி சீதா ஸ்ரீ பல்கலைக்கழக மாணவி
464. டீ.N. தம்பு சட்டத்தரணி
465. தமிழினி சுரேந்ரன் குடிமகன்
466. தமிழ்ச்செல்வி விஜயரெட்ணம் விஞ்ஞான ஆசிரியர்
467. து. தனலட்சுமி பெண் சமூக செயற்பாட்டாளர்
468. தங்கமலர் பெண் சமூக செயற்பாட்டாளர்
469. பு. தங்கராணி பெண் சமூக செயற்பாட்டாளர்
470. தங்கவடிவேல் கஜந்தினி குடிமகன்
471. ளு. தனிக்குமார் சட்டத்தரணி
472. பி. தன்சியா பெண் சமூக செயற்பாட்டாளர்
473. தனுசன் மென்பொருள் பொறியியலாளர்
474. தர்மலிங்கம் கணேஸ் குடிமகன்
475. தர்மரெத்தினம் சுஜீவன் இளம் செயற்பாட்டாளர்
476. தர்மினி பெண் சமூக செயற்பாட்டாளர்
477. சு. தர்சன் மாணவன்
478. பா. தர்சிகா பெண் சமூக செயற்பாட்டாளர்
479. கி. தர்சிகா பெண் சமூக செயற்பாட்டாளர்
480. யூ. தர்சினி பெண் சமூக செயற்பாட்டாளர்
481. தர்சினி சமூக செயற்பாட்டாளர்
482. னுச. வு. தவநேசன் வைத்திய அதிகாரி
483. ச. தவறாஜி பெண் சமூக செயற்பாட்டாளர்
484. த. தவயோகன் சமூகப் பிராணி
485. இ. தவேந்தினி பெண் சமூக செயற்பாட்டாளர்
486. தயாளன் குடிமகன்
487. ஜெ. தயாளினி பெண் சமூக செயற்பாட்டாளர்
488. ஜெ. தயாழினி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
489. இ. தயாபரன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்
490. தயாபரன் ரதி ஆசிரியர்
491. தெட்சணாமூர்த்தி கங்காதரன் சட்டத்தரணி
492. தெய்வானை அமிர்தலிங்கம் பெண் சமூக செயற்பாட்டாளர்
493. தேனுஜன் சமூக செயற்பாட்டாளர்
494. தேவி டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
495. த. திலகராணி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
496. திலவதி சமூக செயற்பாட்டாளர்
497. செ. திலீபன் சமூக செயற்பாட்;டாளர்
498. திருச்செல்வம் திருஅருள் சட்டத்தரணி
499. ஆ. திசாங்கன் ஸ்டூடியோ
500. திவாகர் சமூக செயற்பாட்டாளர்
501. சு. திவாகரன் குடிமகன்
502. ந. திவ்யதேவி பெண் சமூக செயற்பாட்டாளர்
503. தி. தியாகேஸ்வரி பெண் சமூக செயற்பாட்டாளர்
504. துரைசாமி தினேஸ்வரன் குடிமகன்
505. துஷhரா சமூக செயற்பாட்டாளர்
506. ஏ. துஸ்யந்தன் மாணவன்
507. மா. துவாரகா சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
508. உருத்திரன் உமாதாசன் சட்டத்தரணி
509. ச. உஷh சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
510. வடிவேலுப்பிள்ளை சுரேஷ;குமார் பொதுமகன்
511. வள்ளுவன் விரிவுரையாளர், பொயியியல் பீடம்
512. வாணி சிமோன் குடிமகன்
513. ர. வனிதா பெண் சமூக செயற்பாட்டாளர்
514. வனிதா மகேந்திரன் பெண் சமூக செயற்பாட்டாளர்
515. பி. வனிதாமணி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
516. ச. வாணி பெண் சமூக செயற்பாட்டாளர்
517. வசந்த கௌரி சமூகப்போராளி
518. வாசுகி ராஜேந்திரா செயற்பாட்டாளர்
519. வேலாயுதம் கனகசபை ஓய்வுபெற்ற அதிபர்
520. சு. விக்கி மாணவன்
521. விக்டோரியா ரோய் பெண் சமூக செயற்பாட்டாளர்
522. கு. ஓ. ளு. விஜயகுமார் சட்டத்தரணி
523. விஜயகுமார் மதிவதனன் விவசாயி
524. இ. விஜயலஷ;சுமி பெண் சமூக செயற்பாட்டாளர்
525. விஜயமலர் பெண் சமூக செயற்பாட்டாளர்
526. விஜயன் தீனதயாளன் சமூக செயற்பாட்டாளர்
527. விஜயநாதன் மேனகன் பல்கலைக்கழக மாணவன்
528. ற. விஜயவாணி சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
529. விஜிதா ஆசிரியர்
530. விஜயகுமாரி கண்ணதாசன் பெண் சமூக செயற்பாட்டாளர்
531. விமல்ராஜ் சமூக செயற்பாட்டாளர்
532. சு. வினோதினி பெண் சமூக செயற்பாட்டாளர்
533. யு. வினோதினி பெண் சமூக செயற்பாட்டாளர்
534. ம. விர்மகள் சமூக செயற்பாட்டாளர், பெண் உரிமை செயற்பாட்டாளர்
535. சி. விஷhளினி சமூக செயற்பாட்டாளர்;, பெண் உரிமை செயற்பாட்டாளர்
536. விஸ்வநாதன் சஞ்சீவ் வங்கியாளர்
537. விதுசிக்கா சமூக செயற்பாட்டாளர்
538. வின்ஸ்லோ மனித உரிமை செயற்பாட்டாளா
539. வி. யாழினி பெண் சமூக செயற்பாட்டாளர்
540. யது டுபுடீவுஞஐ சமூக செயற்பாட்டாளர்
541. இ. யோகலதா பெண் சமூக செயற்பாட்டாளர்
542. யோகலிங்கம் விஜிதா குடிமகன்
543. யோகானந்தி யோகராசா சட்டத்தரணி
544. யோகராசா நிரோசன் மாணவன்
545. யோகேஸ்வரன் சமூக ஆர்வலர்
546. சி. அ. யோதிலிங்கம் சட்டத்தரணி
547. ப. யூஜின் ஆனந்தராஜ் சட்டத்தரணி
548. வ. நிசாந், சட்டத்தரணி
549. ம. நோயல், சட்டக்கல்லூரி மாணவன்
550. அ. கமிலஸ், ஊடகவியலாளர்
551. அன்ரன் புனிதநாயகம், சட்டத்தரணி

17.01.2023

Spread the love
 
 
      

Related News

2 comments

Logeswaran January 17, 2023 - 3:33 pm

மதியுரைஞர் குழு, பொருளாதார உதவிக்கான முன்னிபந்தனை, நேர அட்டவணை, அன்றாடப்பிரச்சினை, இடைக்கால நிர்வாகம், மத்தியஸ்தம் மற்றும் அரசியல் தீர்வு என்பன தொடர்பான மற்றும் ஏனைய பரிந்துரைகள் எல்லாம் பயனுள்ளவை.

ஆலோசனைகளை முன்வைத்தவர்கள் தற்போது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் சம்பந்தனுடன் பேசி அவரது மனநிலையை மாற்ற முயற்சிக்க வேண்டும். இது, ஆலோசனைகளை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும்.

Reply
Logeswaran January 17, 2023 - 8:27 pm

“தற்போது சிறீலங்காவை பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீட்பதற்கு உதவ முன்வரும் நாடுகளும் அமைப்புகளும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை பொருளாதார உதவிக்கான முன்னிபந்தனையாக முன்வைக்க வேண்டும். பொருளாதார உதவிகளின் ஒவ்வொரு கட்டமும் பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு அடைவுடனும் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும் என்பதை உதவி வழங்குபவர்கள் சிறீலங்காவுக்கு கூறுவதுடன் அதையே நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.” என தமிழ் சிவில் சமூகத்தவர்கள் கேட்கிறார்கள்.

இதை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் சம்பந்தனும் சுமந்திரனும் நடைமுறைப்படுத்த பெரிய முயற்சிகளை வெற்றிகரமாக எடுக்க வேண்டும். இத்துடன் மற்றய தமிழ்க் கட்சித் தலைவர்களும் உதவ முன்வரும் நாடுகளையும் அமைப்புகளையும் நிர்பந்திக்க வேண்டும். செய்வார்களா? இந்த வாய்ப்பை தமிழ் தலைவர்கள் தவற விடக்கூடாது.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More