உலகம் பிரதான செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் ஆய்வாளருக்கும், பறவைகளுக்கும் முன்பே தெரிந்திருந்தது!

துருக்கி நாட்டில் திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய இயற்கை பேரழிவினை பறவைகள் கூட்டம் முன்னதாகவே உணர்த்தியுள்ளன.

அதேபோல மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று 3 நாட்களுக்கு முன்னதாகவே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டச்சு ஆராய்ச்சியாளர். அவரது ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் துருக்கியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக மிகப்பெரிய துயரம் ஏற்படும் முன்பாக அதை இயற்கையானது உணர்த்தும். பறவைகள், விலங்குகளுக்கு இயற்கை பேரிடர் முன்கூட்டியே தெரியவரும்.

இந்நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் பறவைகள் காசியான்டேப் சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நிலநடுக்கத்தை உணர்த்தவே பறவைகள் அவ்வாறு பறந்து திரிந்ததாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து பதிவிட்டனர்.

இதனிடையே, டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் துருக்கி, சிரியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்று மூன்று நாட்களுக்கு முன்பு கணித்திருக்கிறார் .

ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் என்ற அந்த ஆராய்சியாளர், துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே கணித்து அதை பிப்ரவரி 3ம் திகதி ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில் “மத்திய மற்றும் தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வரைபடத்துடன் கூறியிருக்கிறார். அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.