Home இலங்கை உலகின் சிறந்த  பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பேராதனை பல்கலைக்கழகம்

உலகின் சிறந்த  பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பேராதனை பல்கலைக்கழகம்

by admin

உலகில் சிறந்த  பல்கலைக்கழகங்கள் தொடர்பான தரவரிசையில் 901ஆவது இடத்தை பேராதனை பல்கலைக்கழகம் பெற்றுக்கொண்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார்.   பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தொிவித்துள்ளாா்.

உலகப் பல்கலைக்கழகங்கள்  அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் பதின்மூன்று சிறந்த குறிகாட்டிகள் மூலம்  தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுமார் இரண்டாயிரம் பல்கலைக்கழகங்கள் மற்றும் முப்பதாயிரம் உயர்கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த பட்டியில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான தரவரிசையைப் பெற்றுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம் பேராதனை பலக்லைக்கழகம் எனவும் இதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் துணைவேந்தர்  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More