Home இலங்கை நெடுந்தீவில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

by admin

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்களும் இன்றைய தினம் அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போது , கடற்படையினர் கைது செய்து அவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக 12 கடற்தொழிலாளர்களும் கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு , அவர்கள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More