Home இலங்கை முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படம் – முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படம் – முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு

by admin

இலங்கை கிரிக்கெட் வீரரான  முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்  படமான ´800´ படத்த்தின் முதல் தோற்ற போஸ்டர் அவரது பிறந்தநாளான் இன்று   வெளியாகியுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு  கனிமொழி´ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான  எம்.எஸ்.ஸ்ரீபதி இந்தப் படத்தைதை இயக்கி வருகிறார். மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ´ஸ்லம்டாக் மில்லியனர்´ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடிப்பதுடன்  மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளதையடுத்து முதல்  தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

´800´ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More