Home இலங்கை வல்லையில் சடலம் மீட்பு – பெயர் விபரம்

வல்லையில் சடலம் மீட்பு – பெயர் விபரம்

by admin
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள புழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
பலாலியை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வசித்து வருபவருமான வசந்தகுமார் ஸ்ரீகாந்த் (வயது 36)  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் காணப்படும் நிலை சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ளமையால் , கொலையா ? தற்கொலையா ? என காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More