පුවත්

News Articles

அனுராதபுரம் SPயின் சப்பாத்தை நக்கி காலில் விழுந்து கும்பிடும்வரை அரசியல் கைதிகள் தாக்கப்பட்டார்கள்

 

கொடுங்கோல் ஆட்சியின் உச்சம்:-

அனுராதபுரம் SPயின் சப்பாத்தை நக்கி காலில் விழுந்து கும்பிடும்வரை  அரசியல் கைதிகள் தாக்கப்பட்டார்கள்

 

வவுனியா சிறைக்குள் புகுந்த 15 முதல் 23 வரையிலான அரசாங்க பாதுகாப்புத் தரப்பின் குண்டர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளால் மயங்கிய நிலையில் இருந்த சிறைக் கiதிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து வாகனங்களில் தூக்கி போடப்பட்ட கைதிகள் பிற்பகல் 1 மணியளவில் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு இரவு 11 மணிவரை இடைவிடாது தாக்கப்பட்டனர். 

அங்கு குடிபோதையில் இருந்த சிறைக்காவலர்களும் காவற்துறையினரும் சிறைச்சாலை சுப்ரின்டனின் கால் சப்பாத்தை நக்குமாறு தொடர்ச்சியாக தாக்கியுள்ளனர். ஒவ்வொருவராக காலில் விழுந்து கும்பிட்டு சப்பாத்தை நக்கிய பின்னும் தாக்கப்பட்டுள்ளார்கள். 

இதன் தொடர்ச்சியாக கடுமையான கிரிமினல் குற்றவாளிகளை கொண்டு வந்து அரசியல் கைதிகளின் முகங்களில் காறித் துப்புமாறு பணிக்கப்பட்டு மாறி மாறி கிரிமினல் கைதிகள் தமிழ் கைதிகளின் முகங்களில் துப்பியதோடு களைக்கும் வரை அடிக்கும்படி பணிக்கப்பட்டு உள்ளார்கள்.

அனைத்து கைதிகளையும் காலை நீட்டச் சொல்லி முழங்காலுக்கும் பாதத்திற்கும் இடையில் கடுமையாக தாக்கியதில் முழங்காலுக்கு கீழ் அனைவருக்கும் கட்டு போடப்பட்டுள்ளது. அனைவருக்கும் உடலின் உட்காயங்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் முதுகில் வட்டமாக பெரிய காயம் ஒன்று உள்ளது இதற்கு காரணம் பிஸ்ரலால் அவர் சுடப்பட்டதாக தெரியவருகிறது.

அனைத்து கைதிகளினதும் விலா எழும்பு முறிக்கப்பட்டுள்ளது. அனைவரதும் உடுப்புகள் அனுராதபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாற்று உடுப்புகள் இல்லை. ரத்தக்காயங்களுடன் 3 நாட்கள் மாற்றுடையின்றி விடப்பட்டனர். 

சந்தேகத்தின் பேரில் கைதான நிலையில் இப்போ அடித்துக் கொல்லப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த நிமல ரூபனின் கால்கள் நடுவால் கிளிக்கப்பட்டுள்ளது. இறப்பதற்கு முதல்நாள் இரவு உடலின் கண்டல் காயங்களில் இருந்து நீர் வழிந்தோடியிருக்கிறது. தான் இறக்கப் போவதாக இரவு முழுவதும் வேதனையால் துடித்துள்ளார். கால்களுக்கு இடையில் மரக் கட்டைகள் வைக்கப்பட்டு கால் கிளிக்கப்பட்டதால் இடுப்பு பகுதி பலமான சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் உள்ள மற்றும் ஒரு கைதியின் மண்டைப் பகுதி கடுமையாக தாக்கப்பட்டதனால் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இவரது உயிரை காப்பது மிகவும் கடினம் என அனுராதபுரத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள்  தெரிவிக்கின்றன. 

றாகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ள நால்வரில் ஒருவர் கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

இந்தப் போராட்டத்தில் முன்னின்றவர்கள் என அரச பாதுகாப்பு குண்டர்களால் அடையாளம் காணப்பட்ட   மூவரே போகம்பர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு அவர்கள் மிகக் கொடூர சித்திரவதைகளை எதிர் கொள்வதாகவும் சிறைச்சாலை அதிகார மட்டத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கைதிகள் அனைவரது உடல்களிலும் செயின் மற்றும் சவுக்கு போன்ற பார்களால் அடிக்கப்பட்ட தழும்புகள் ரத்தக் காயங்கள் காணப்படுகின்றன. 

இந்த நிலையில் இனி தம்மை அனுராதபுரத்திற்கு மாற்ற வேண்டாம் என்றும் மகரவிலேயே தாம் செத்து விடுகிறோம் எனவும் கைதிகள் அலறுகின்றனர். வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு ஏற்றிய போது அனைவரையும் அடித்தே கொல்லப் போகிறோம் எனக் கூறி இலங்கை அரசாங்க பாதுகாப்பு தரப்பின் குண்டர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனால் தமது உயிர்களைக் காப்பாற்றுமாறும் அல்லது மகர சிறையிலேயே சமாதி ஆக்குமாறும் கைதிகள் கோரி உள்ளனர். 

கடுமையான உயிர் பிரியக் கூடிய ஆபத்தான காயங்களுடன் இருக்கும் அவர்களுக்கு உரிய உடன் வைத்திய சிகிச்சைகள் அளிக்காவிடின் ஏனையவர்களும் கொல்லப்படும் நிலை காணப்படுவதாக சிறைச்சாலைகளோடு தொடர்புடைய மனிதாபிமானம் மிக்க அதிகாரி ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். உடனடியாகவே மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச சமூகம் தலையிட்டு இவர்களை உரிய சிகிச்சைக்கு வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பாதுகாப்பு செயலாளரும் இலங்கையின் நிஜ எஜமானுமான கோத்தாபய ராஜபக்ஸவுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

 

Tamil inmates were asked to lick Superintendent’s feet and were beaten up mercilessly

 

අනුරාධපුරය SPගේ සපත්තු ලෙවකා දෙපා වැටී වැඳිනතෙක් දෙශපාලනික සිරකර ැවන් පහරකෑමට ලක්විය...

 

5 ජූලි. 12 14:43 (GMT)

තවත් දෙමළ සිරකර ැවකුගේ පිටයෙහි රවුමකට ලොකු

Comment(s)
(5) Comment(s)
05/07/2012, 2:44 PM
 - Posted by AVATHAANY
வாசிக்கவே நெஞ்சம் பதறுகின்றது.மிகக் கொடுமையானது எனக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.ஆனால் இதற்கு என்ன பெயர்.திரு.சொலமன் இச்செய்திபற்றி உங்கள் கருத்து என்ன?.இதைவிடத் தமிழர்கள் மிகவும் மோசமாக சித்திரவதை அனுபவிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கவில்லையா.
05/07/2012, 9:31 PM
 - Posted by Anonymous
மக்கள் போராட்டங்களை அடக்க முனையும் கேடு கெட்ட அரை குறை யாழ்ப்பான நீதவான் போன்றவர்கள் இந்த கொடுமைகளுக்கு என்ன தீர்ப்பு ..நீங்கள் சொல்லும் தேச பக்தி,நாட்டு நலன் வார்த்தைகளுக்கு உங்கள் பதில் என்ன ???? உங்களுக்கு மனசாட்சி இல்லையா ?????????
தமிழ் பத்திரியாளர்கள் மீது விசாரணை கேட்கும் நீங்கள் இந்த அடக்கு முறைகளுக்கு ,கொடுமைகளுக்கு ஏன் தீர்ப்பு சொல்லவில்லை ..அநியாமாக இன்றும் ஒருவர் இராணுவதால் கொல்லபட்டு இருக்கிறார் ..இன்னு மொருவர் தேச விரோத ஆயுத கும்பலால் வெட்டி கொலை செய்ய பட்டு இர்ருகிறார் ....EPDP ரங்கன் போன்ற சட்டத்தரணிகள் உங்கள் நீதி எங்கே ????????????
யாழ் மருத்துவர்கள் போராட்டம் மீதும் தடை விதிக்கும் இந்த நீதவான் அவர்கள் போராட்டம் உங்கள் எஜமானர்களை என்ன செய்கிறது????? மருத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை இன்னும் கண்டுபிடிக்கத போலீஸ் மீது என்ன நடவடிக்கை ????????..இதுவும் ஆயுத போரரட்டம் என்று நினைகிரிர்களா ?????
அப்பாவி மக்களை இலங்கையின் செத்து போன நீதி துறை மூலம் ஏமாற்றும் உங்களுக்கு காலம் தீர்ப்பு எழுதும் ????????
சொந்த மக்களையே சுய நலனுக்காக கட்டி கொடுக்கும் இந்த தொழிலை விட வேற வேலை செய்யலாம் ?????????
05/07/2012, 9:55 PM
 - Posted by Anonymous
வவுனியா சிறையில் உண்ணவிரதம் இருந்தவர்களை ஏமாற்றி வாபஸ் வாங்க வைத்த சுமந்திரன் இப்பொளுது எங்கே, தமிழனுக்கு எதிரி தமிழனே தான், ஒருமாத தவணை கொடுத்த சுமந்திரன் இப்பொளுது என்ன செய்யப்போகின்றார், மீன்டும் ஜனாதிபதியுடன் தேநீர் அருந்துவாரா அல்லது மீன்டும் மீன்டும் தமிழர்களுக்கு துரோகம் தானா.
05/07/2012, 11:25 PM
 - Posted by piranavan,
சுமத்திரனும் சம்மந்தனும் தமிழ் மக்களுக்குரிய சரியான தலைமை கிடையவே கிடையாது!ஆனால் தற்போது தமிழ் மக்களுக்கு வேறு தெரிவும் இல்லை.நாம் வாக்களித்த மக்களையும் குறை சொல்ல முடியாது.த.தே கூட்டமைப்பின் நடவடிக்கையையும் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத நிலமையில் நாம்.சம்மந்தரின் ராஜதந்திரமும் சுமத்திரனின் சட்ட ஆலோசனையும் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்களே அப்படித்தான்.எங்கள் தலையெலுத்தை நினைத்து வேதனை படுவதை தவிர வேறு வழி என்ன?
06/07/2012, 7:21 AM
 - Posted by தமிழன்
தமிழனுடைய போராட்டம் எதற்காக தொடக்கப்பட்டதோ அதே திரும்பவும் தொடக்குகிறது.மிகக் கொடுமையானது மிசே;சதனமான சம்பவம் இது. இனியாவது தமிழ்கட்சிகள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
Add Comment
Only registered users may post comments.
 
 
.