පුවත්

News Articles

மற்றுமொரு சீனப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

 

மற்றுமொரு சீனப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

 

மற்றுமொரு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த வார இறுதியில் இந்தக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
சீனாவின் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
 
சீனாவின் விளையாட்டுத்துறை சிரேஸ்ட அதிகாரி லியூ பெங் உள்ளிட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
 
விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சீனாவின் உதவிகளை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
 
கடந்த ஐந்து வாரங்களுக்குள் சீனாவின் மூன்று உயர்மட்ட பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Comment(s)
There are currently no comments, be the first to post one.
Add Comment
Only registered users may post comments.
 
 
.