செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

மலாவி ஜனாதிபதி உயிரிழப்பு?

 

இருதயக் கோளாறு காரணமாக, 78 வயதான முதாரிக்கா ..

மலாவி ஜனாதிபதி உயிரிழப்பு?

 

மலாவியின் ஜனாதிபதி பிங்கு வா முதாரிக்கா உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்தச் செய்திகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
 
இருதயக் கோளாறு காரணமாக, 78 வயதான முதாரிக்கா நேற்றைய தினம் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறாயினும் மலாவி ஜனாதிபதி சிகிச்சைகளுக்காக தென் ஆபிரிக்கா சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள், செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஜனாதிபதியின் மறைவு நாட்டின் பிரச்சினைகளை மேலும் சிக்கல் நிலையில் ஆழ்த்தும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானியாவும் அமெரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளன.
 
அனுப்புக Home, World News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.