செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை – அன்ட்ரேஸ் பிரிவிக்

 

குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை – அன்ட்ரேஸ் பிரிவிக்

 

குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என நோர்வேயில் 77 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அன்ட்ரேஸ் பிரிவிக் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
 
நோர்வே தலைகரில் குண்டுத் தாக்குதல் நடத்தியமை மற்றும் இளைஞர் பயிற்சி முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை பிரிவிக் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
தாக்குதல் நடத்தியதனை அவர் ஒப்புக் கொண்ட போதிலும், குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
 
நோர்வே நீதிமன்றில் தமக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போதைய நோர்வே அரசாங்கம் பல்லின கலாச்சாரத்தை போஷிப்பதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பிரிவிக்கிற்கு எதிராக முதல் தடவையாக இன்றைய தினம் வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டது.
 
பிரிவிக், சித்த சுயாதீனத்துடன் இந்தக் குற்றச் செயல்களை மேற்கொண்டார் என நீதிமன்றம் தீர்மானித்தால் 21 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிறைச்சாலையில் ஓர் எழுத்தாளராக கடமையாற்றி வருவதாக பிரிவிக் நீதிமன்றில் தம்மை அறிமுகம் செய்து கொண்டார்.
 
இந்தத் தாக்குதல் சம்பவங்களை குற்றச் செயலாக கருதவில்லை எனவும் நாட்டுக்கு எதிரான துரோகிகளை தடுக்கும் நடவடிக்கையாக தாம் இதனைக் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவிக் நடத்திய தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டதுடன், 209 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அனுப்புக Home, World News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.