இஸ்ரேலுக்காக உளவுப் பணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவருக்கு ஈரான் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானிய அணு விஞ்ஞானி ஒருவரை குறித்த நபர் படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
24 வயதான மஜிட் ஜமாலி பாஸீ என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் ஈரானிய அணு விஞ்ஞானி பேராசிரியர் மசூட் அலி மொஹமதீ அவரது வீட்டுக்கு வெளியே கார்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜமாலி பாஸீ இஸ்ரேலின் மொஸாட் உளவுப் பிரிவிடமிருந்து 120000 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அணு விஞ்ஞானி மொஹமதீயை படுகொலை செய்வதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன்று காலை ஜமாலி பாஸீக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் அணுத் திட்டங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து சீர்குலைக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.முறைப்பாட்டு அறிக்கைகளை துரித கதியில் வழங்க நடவடிக்கை – காவல்துறை
காவல்துறை முறைப்பாட்டு அறிக்கைகளை துரித கதியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் தொடர்பிலான மூலப் பிரதிகளையே பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதிப்பத்திரம், வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரம், ஏனைய ஆவணங்கள் மற்றும் பாரிய விபத்துக்கள் அல்லாத முறைப்பாட்டு அறிக்கைகள் என்பன இவ்வாறு வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருபத்து ஐந்து ரூபாவினை செலுத்தி இந்த முறைப்பாட்டு அறிக்கையினை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.