மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததே தான் செய்த மிகப்பெரிய தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியதே நான் செய்தி மிகப்பெரிய தவறு. அன்று செய்ய வேணடிய சிறந்த விடயத்தையே நான் செய்தேன். அப்போதைய அரசாங்கம் எம்மவர்களுக்கு இடையூறுகளை செய்தது. ஆயிரத்து 600 முறைப்பாடுகள் வரை கிடைத்திருந்தன. இதன் காரணமாக நான் அன்று அந்த முடிவை எடுத்தேன். ரணிலுடன் இணைந்து செயற்பட எவ்வளவு முயற்சிகள் செய்த போதிலும் அது கைக்கூடவில்லை. நான் மீண்டும் அரசியலில் ஈடுபட மாட்டேன். எந்த பக்கத்தையும் சார மாட்டேன். விரும்பியவர்களுக்கு ஆலோசனை வழங்குவேன் எனவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.