"காணிகளுக்கு செல்லாவிடின் மீண்டும் இன்று முகாமிற்கு அனுப்புவோம்" - கட்டளைத் தளபதி - ஒருவருக்கு மாரடைப்பு
முறிகண்டி நிலப்போர் - இராணுவம் நிர்பந்தித்ததால் ஒருவருக்கு மாரடைப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
25-06-2012-04:18:-
முறிகண்டிதமது காணிநிலங்களைக் கோரி அப்பகுதி மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளையதனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் முறிகண்டி நில அபகரிப்புக்கு எதிராகபோராட்டத்தில் குதிக்கவுள்ள நிலையில் இராணுவத்திர் தாம் வழங்கும் ¼ ஏக்கர் நிலப்பகுதியில் மக்களை குடியேறுமாறு நிர்பந்தித்து வருகின்றனர்.
இன்றையதினம் மக்கள்தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள முறிகண்டி இந்து வித்தியாலத்திற்குச் சென்ற இராணுவத்தினர் மக்களை குடியேற சம்மதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தனர். தனித்தனியாக ஒவ்வொருவரிடத்திலும் இவ்வாறு நிர்பந்தித்த வேளை சிவலிங்கம் என்பவர் மாரடைப்பால்மயங்கி விழுந்த சம்பவம் மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சிவலிங்கம்தற் பொழுது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவர் கடுமையாக மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் மக்களின்மனநிலை பாதிக்கும்படி பலவந்த குடியேற்றத்திற்கு நிர்பந்திதத்து வருகின்றனர்.
இன்றையதினம் காலை முதல் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மக்களுடன் பேசி தாம் வழங்கும் ¼ ஏக்கர் நிலப்பகுதியில் குடியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் மக்களோ தமது சொந்தக் காணிகள் முழுவதையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவற்றிலேயேமீளக்குடியேறுவோம் என்றும் அரசு வாக்களித்தபடி தங்கள் நிலத்தை பறிக்காமல் மீளக்குடியேற்றவேண்டும் என்றும் கோரி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளைமுறிகண்டியில் நடைபெறவுள்ள நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் தமது காணிநிலங்களைமுழுமையாக விடுவிக்க உதவும் என்றும் தமது மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் என்றும் முறிகண்டிமக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.