செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

உண்மைக்குப் புறம்பான செய்திதொடர்பாக - அன்புள்ள 'குளோபல் தமிழ் செய்திகள்' ஆசிரியருக்கு - சந்திரகுமார்

 

GTN செய்தியும் இணைக்கப்பட்டு உள்ளது

உண்மைக்குப் புறம்பான செய்திதொடர்பாக - அன்புள்ள 'குளோபல் தமிழ் செய்திகள்' ஆசிரியருக்கு - சந்திரகுமார்

இலங்கை பாராளுமன்ற பிரதி குழுக்களின் தலைவரும EPDPயின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகுமார் தனது செய்தி குறித்து; அனுப்பிய பதில் எந்தவித திருத்தமும் இன்றி முழுமையாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்:-

உண்மைக்குப் புறம்பான செய்திதொடர்பாக - அன்புள்ள 'குளோபல் தமிழ் செய்திகள்' ஆசிரியருக்கு,

வணக்கம். தங்களுடைய இணையத் தளத்தில் 'வடபிராந்திய கடற்படைத்தளபதி VS சந்திரகுமார் - மணல் அகழ்வு VS மனச்சாட்சி = மௌனம்' என்றதலைப்பில் ஒரு செய்தி 25.06.2012 அன்று பதிவேற்றப்பட்டிருந்தது.

பொதுத்தள மொன்றிற் பகிரப்படும் செய்தியில் உண்மைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது ஊடகதர்மமும் அடிப்படை ஊடகவியற் பண்புமாகும். அது ஊடகத்துறையின் அறிவுசார் விழுமியத்தை உடையதுமாகும். ஆனால், இவை அனைத்துக்கும் புறம்பான முறையில் முற்றிலும் உண்மையல்லாத – பொய்யான செய்தியை தங்களின் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியும் அதிற்கூறப்படும் சம்பவங்களும் விளக்கங்களும் உரையாடல்களும் மிகப் பகிரங்கமாக பொதுமக்கள் மத்தியிலும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியிலும் நடந்தவையாகும்.

உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது இவற்றுக்கு முற்றிலும் மாறாக ஒரு செய்தியைத் திரிவு படுத்தி உங்களுடைய செய்தியாளர் ஒரு செய்தியைப் புனைந்துள்ளார். இதைக் குறித்து தாங்கள் கூட பரிசீலனை செய்யவில்லை என்பதே மிகக்கவலைக்குரியதாக உள்ளது.

இதனையிட்டு ஆழ்ந்த வேதனையும் ஊடகத்துறையின் இத்தகைய நிலைகுறித்த என்னுடைய கவலைகளையும் தெரிவிக்கிறேன்.

ஆகவே இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை விளக்கி இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.

குறித்த செய்திக்கான விளக்கம் -

கடந்த 25.06.2012 அன்று காலை ஊர்காவற்றுறைப் பிரதேச சபையில் தீவகங்களின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களுடைய தேவைகள், பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதற்காக அங்கே சம்மந்தப்பட்ட திணைக்களங்கள், அமைப்புகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், படைத்துறையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கடற்றொழில் செய்வதற்கு கடற்படையினரின் பாஸ் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது எனவும் இதற்காகத் தனியான அடையாள அட்டையை விசேடமாகப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது எனவும் இதனால் கடற்றொழிலை மேற்கொள்ளச் சிரமமாக உள்ளது எனவும் கடற்றொழில் அமைப்புக்களால் எடுத்துரைக்கப்பட்டது.

ஆகவே, இது தொடர்பாக அங்கே பிரசன்னமாகியிருந்த வடபிராந்தியக் கடற்படை கட்டளை அதிகாரி கப்டன் லுஆபுடீ.ஜெயதிலக என்பவரிடம் விளக்கத்தைக் கோரினேன். அதற்கு அவர், 'குற்றச்செயல்கள், கடத்தல்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக இத்தகைய பாஸ்நடைமுறையையும் அடையாள அட்டைத் திட்டத்தையும் தாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது' என்றார்.

'அப்படியானால், அந்தக் குற்றச் செயல்களையும் கடத்தற் சம்பவங்களையும் பதிவுசெய்துள்ளீர்களா? அப்படிச் செய்திருந்தால் அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள். இதேவேளை நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதச் சம்பவங்கள் பல நடைபெறுகின்றன எனப்பல பகிரங்கச் செய்திகள் வெளிவந்துள்ளன. அங்கே ஆட்கடத்தல்கள் தொடக்கம் போதைப்பொருட் கடத்தல்வரை நடைபெறுகின்றது என பொலிஸ் திணைக்களத்தின் பதிவுகளே உள்ளன. ஆனால் இன்னும் அங்கே இப்படியான பாஸ் நடைமுறைகள் வரவில்லை. அப்படியிருக்கும்போது இங்கே மட்டும் எதற்காக இப்படி ஒரு விசேட நடைமுறை? ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதை நாடுமுழுவதற்குமாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடற்றொழில் செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் அன்மையில் தெரிவித்து கட்டுப்பாடுகளை நீக்கியிருப்பதாகத் தெரிவித்த பதிலையும் பெற்றிருந்தேன்.' என்றேன்.

 இதனை விளங்கிக் கொண்ட கடற்படை அதிகாரி, இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் இந்திய ஊடுருவல்களைப் பற்றியும் தெரிவித்தார். இதுதொடர்பாக நாம் அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு மாறாக விசேடமாகச் செயற்பட முடியாது. ஆகவே பாஸ் நடைமுறையும் அடையாள அட்டை முறையும் தேவையில்லை என்று தெரிவித்தேன்.

இதற்குப் பின்னர், கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதேவேளை இன்னொரு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் தெரிவித்து அனுமதியைப் பெற்றுக்கொண்டே குறித்த கடற்படை அதிகாரி அங்கிருந்து சென்றார்.

ஆனால், குறித்த செய்தியில் சீற்றமடைந்த அதிகாரி கூட்டத்திலிருந்து வெளியேறினார் என்று எழுதப்பட்டுள்ளது. இது எவ்வளவு கீழ்த்தரமான புனைவாக உள்ளது?

மேலும் குறித்த அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடுத்த விடயம் தொடர்பாக –

மண்கும்பான் பகுதியில் மணல் அகழ்வின் மூலமாக ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பெண் ஒருவரால் எடுத்துக் கூறப்பட்டது.

இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழித்தட அனுமதி முறை மீண்டும் அமூலுக்கு வந்துள்ளதால், கனியவளத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதா எனக் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணித்தேன்.

தொடர்ந்து சட்ட விரோத மணல் அகழ்வு நடக்காமலிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.

இதுவே அங்கே நடந்தது. இதேவேளை குறிப்பிடப்படும் மண்கும்பான் பிரதேசத்தில் மகேஸ்வரி நிதியம் மண் அகழ்கிறது என்ற குற்றச்சாட்டை அங்கே எவருமே முன்வைக்கவில்லை. இது அங்கே பேசப்படாத ஒரு விசயத்தை இட்டுக்கட்டி எழுதப்பட்டுள்ளது. மேலும் மகேஸ்வரி நிதியம் என்ற அமைப்பு மண்கும்பானில் மணல் அகழ்வை மேற்கொள்ளவேயில்லை.

மண்கும்பானில் கனியவளத்திணைக்களத்தின் அனுமதி பெற்று எஸ்.பிரகலாதன் என்பவரே கட்டிடத்தேவைகளுக்காக மணல் அகழ்வில் ஈடுபட்டுவருகின்றார் இதுதொடர்பாக தாங்கள் தாராளமாக சகல தரப்பிடமும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் கனியவளத் திணைக்களத்திலும் இது தொடர்பாக தாங்கள் விவரமறியலாம்.

உண்மை நிலைமை இவ்வாறிருக்கையில் இட்டுக்கட்டப்பட்ட அவதூறைச் செய்தியாக உருவாக்கி தங்களுடைய இணைத்தளம் வெளியிட்டுள்ளது என்பதைத் தங்களுடைய கவனத்திற்கும் வாசகர்களின் கவனத்திற்கும் தெரிவிக்கிறேன்.

 நன்றி

வட பிராந்திய கடற்படைத் தளபதி VS சந்திரகுமார் - மணல் அகழ்வு VS மனச்சாட்சி = சந்திரகுமாரின் மௌனம்

25 ஜூன் 2012 -

GTN NEWS

வட பிராந்திய கடற்படைத் தளபதி VS சந்திரகுமார் - மணல் அகழ்வு VS மனச்சாட்சி = சந்திரகுமாரின் மௌனம்

 

 

வட பிராந்திய கடற்படைத் தளபதி VS சந்திரகுமார் - மணல் அகழ்வு VS மனச்சாட்சி = சந்திரகுமாரின் மௌனம்

 

பாராளுமன்ற குழுக்களது தலைவரும் ஈபிடிபி முக்கியஸ்தருமான சந்திரகுமாருடன் முரண்பட்ட வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி கூட்டத்தினிலிருந்து வெளி நடப்பு செய்தமை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் ஊர்காவற்றுறை பிரதேச சபை மண்டபத்தினில நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்தே வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி கூட்டத்தினிருந்து வெளி நடப்பு செய்ததாக தெரியவருகின்றது.
 
குடாநாட்டின் பல பகுதிகளிலும் மீன்பிடி பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுவிட்டபோதும் தீவகப்பகுதிகளில் இவை கடற்படையினரால் அமுல்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அவ்வேளையில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த சந்திரகுமார் இதனால் சீற்றமுற்றிருந்தார்.
 
குறிப்பாக படையெடுத்து வந்துள்ள தெற்கு சிங்கள மீனவர்களுக்கு இத்தகைய கெடுபிடிகள் ஏதுமில்லையெனவும் உள்ளுர் மீனவர்களான தமக்கு மட்டும் இத்தகைய கெடுபிடிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தமையையடுத்தே அவர் கோபமுற்றிருந்தார்.
 
எனினும் அங்கு பிரசன்னமாகியிருந்த வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி அரச உயர்மட்ட உத்தரவு பிரகாரமே தான் பாஸ் நடைமுறைகளை அமுல்படுத்துவதாக தெரிவித்ததுடன் இந்திய மீனவர்களது விவகாரம் மற்றும் தென்னியாவிலிருந்து நடைபெறும் ஊடுருவல் என்பவை தொடர்பாக கூறத்தொடங்கினர். எனினும் இங்கு வந்துள்ள சிங்கள மீனவர்களுக்கு இத்தகைய பாஸ் அனுமதிகளில்லையெனின் உள்ளுர் மீனவர்களுக்கும் அவை தேவையில்லையென சந்திரகுமார் கூறினார்.
 
இதனால் பதிலுக்கு சீற்றமடைந்த வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி கூட்டத்திலிருந்து வெளியேறினார். தனக்கான கௌரவத்தை தரவில்லையென பதிலுக்கு கோபமுற்ற சந்திரகுமார் தொடர்ந்தும் கூட்டத்தை நடத்தினார்.
 
அதே வேளை மண்கும்பான் பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத மண் அகழ்வு காரணமாக நிலத்தடி நீர் உவர் நீராகுவதாக விவசாயிகள் தரப்பில் குற்றஞ்சாட்டுக்கள் எழுப்பப்பட்டது. உடனடியாக பொலிஸாரை அழைத்த அவர் மணல் அகழவை இடை நிறுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். எனினும் அப்பகுதியினில் மணல் அகழ்வை தங்களது மகேஸ்வரி நிதியமெனும் அமைப்பே மேற்கொண்டுவருவதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டதையடுத்து அவ்விடயத்தை பற்றி பின்னர் அவர் மேலும எதுவுமே தெரிவித்திருக்கவில்லை.
 

 

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
27-06-2012, 22:19
 - Posted by Anonymous User
இந்த செய்தி குறித்து உண்மைத்தன்மை தெரியாதபோதும் நாங்கள் உறுதியாக GTN செய்திகளை நம்புகிறோம்.சந்திரகுமார் அவர்களிடம் என்னுடைய நீண்ட நாள் சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன்.
நீங்கள் ராணுவ துணை அமைப்பாக செயர்த்படுகிரிகள் என்பதை மறுக்க முடியுமா ..மாதந்தோறும் இலங்கை பாதுகாப்பு அமைச்சில் பணம் பெறுவது எதற்காக....உலக நடைமுறையில் எந்த அரசிசல் அமைபவது ராணுவ அமைச்சில் பணம் பெறுகிறத ...இறுதி யுத்த களத்தில் எங்கள் பிரதேசத்தில்(jaffna) காணமல் போன ஆயிரக்கணக்கான எங்கள் உறவுகள் எங்கே ...கொல்லப்பட்டவர்களுக்கு என்ன பதில்....
நீண்டகாலமாக அரசில் உள்ள நீங்கள் இதுவரை பெற்றுதந்த நன்மைகள் என்ன...உண்மையான அபிவிருத்தி என்கேன்ற்றலும் நடந்தத ...விசேடமாக தீவுபக்குதியில் என்ன நடக்கிறது ...இன்றுவரை நடந்த எதாவது நல்ல விடயங்களை கூறமுடியுமா ......
கொலைகள் ,கடத்தல்,கட்பல்லிப்பு என உங்கள் அமைப்பு செய்யாத எதாவது விடயங்கள் இருகிறதா .....ஒருசில உங்கள் உறுப்பினர்கள் பிடிபடும் போது அவர்களை உங்கள் உறுப்பினர் இல்லை என மறுப்பது உங்கள் வாடிக்கை ...கபில்னத் கொலையில் சம்பத்தப்பட்ட உங்கள் உறுபினர் எங்கே .....நிமலராஜன கொலையில் சமந்தப்பட்ட உங்கள் உறுப்பினர் எங்கே....மகேஸ்வரனை என்ன கொலை செய்திர்கள் ......அற்புதனை கொலை செய்தது யார் .....
கடந்த காலங்களில் ஏன் அவசரகால சட்டதிட்க்கு அதரவாக வக்காளிதிர்கள் .....
வேலைவைப்புக்க எங்கும் எமது நண்பர்களை உங்கள் சுய நன்மைக்காக பயன்படுதிர்கள் ...eg பல்கலை மாணவர்களை பல விதமாக கடந்த காலங்களில் கிண்டல் செய்த நீங்கள் உங்கள் தனிப்பட்ட உதவியர்ளராக பயன்படுத்தும் நபர் யார்..பட்டதாரி சங்கத்தை உடைத்து அதன் தலைவரை எப்படி உங்கள் உதவியாளர் அக்கிநீர்கள்....அவர் எப்படி பல்கலை வந்தார் என உங்களுக்கு தெர்யும
எங்கள் பிரதேசங்களில் நீங்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவது யார் ...அதை எதிர்த்த அம்பன் நபரை கொலை செய்ததது யார்
அரச ஊழியர்களை வெர்ருட்டி சகல அரச வைபவங்கலயும் ,அரச சாரதா நிறுவன அபிவிருத்தி திறப்பு நிகழ்வுகலயும் கலந்து கொல்வத அபிவிருத்தி ???...அதை நீங்கள் செய்ததாக காட்டி கொள்கிறிர்கள்
நீங்கள் சமந்தபட்ட ஊழல் மோசடிகளை மறுக்க முட்டியும.....இந்தியன் சைக்கில் திட்டத்தில் என்ன நடக்கிறது ....யாழ் நவீன கடை தொகுதியில் ஏன் நீங்கள் பற்று சீட்டுக்கு அதிகமாக காசு வந்குகிரிர்கள் ....எங்கள் பிரதேசத்தில் சந்திரிகா காலத்தில் நடந்த அத்தனை நிதி மோசடிக்கும் யார் பொறுப்பு
JMC யில் நாள் தோறும் நடக்கும் மோசட்டிகளுக்கு யார் பொறுப்பு
நீதிவான்கள்,அதிபர்கள் உட்பட சகல அரச விடயங்களயும் நீதிக்கு அப்பால் என்ன உங்கள் அரசியல்லுக்க தலையீடு செய்கிரிகள் ....recent EG: VEMBADI,HINDU LADIES PRINCIPALS,Chavakaseri judge
உங்கள் தப்புகளை மறைபதட்க்கு ஊடககங்கள் மீது பழி போடும் நீங்கள் எததனை ஊடக ஊழியர்களை கொலை செய்திர்கள் ...அங்கே வேலை செய்ததை தவீர அவர்களின் பிழை என்ன
இன்றுவரை அரசோடு இருக்கும் நீங்கள் அரச கொடுமைக்களுகேதிறக்க ஏன் பேசவில்லை ....புத்த விக்கரைகள் ,சட்டவிரோத குடி பரம்பல் ,பொதுமக்கள் தாக்கபடுவது என அவை நாள் தோறும் நட்டகின்றன ..ஆனால் அதை சொல்லலும் ஊடகங்களை பொய் என சொளுகிரிர்கள்
யுத்த களத்தில் அரச வானொலியில் அரசை நியாய படுத்த நிகழ்ச்சி செய்த நீங்கள் அதில் எத்தனை வீதம் உண்மை சொன்னீர்கள் ......சகல சம்பவங்களையும் திசை திருப்பி அரசை நியாயம் செய்திர்கள் ஏன் ..இன்று ஊடக தர்மம் பேசுகிரிகள் ஒரு சம்பவம் ....மன்னார் பகுதிளில் பொதுமக்கள் விமான தாக்குதலில் கொல்லப்பட அதை புலிகள் கொன்றார்கள் என பொய் சொன்னீர்கள்
புலிகள் தான் தீர்வுக்கு தடை என சொன்ன நீங்கள் இதுவரை தீர்வுக்காக என்ன செய்திர்கள்\
தொண்டர் ஆசிரியர்கள் ,வறுமையில் வாடும் மக்கள் என பலரை மோசடி செய்து வாக்கு அரசியல் நடத்தும் நீங்கள் அரச நிதியை வீண்விரயம் செய்யவில்ய
யுத்த களத்தில் பொதுமக்கள் இழப்பு தொடர்பில் ஏன் அரசோடு சேர்ந்து பொய் சொளுகிரிர்கள் ...ஜெனீவா கூடத்தில் அரசுக்கு ஏன் வக்காலத்து செய்திர்கள்
LLRC ரிப்போர்ட்கு எதிராக வழக்கு போடுவதாக சொன்ன நீங்கள் என்ன இன்னும் அதை செய்யவில்லை
மீள்குடிஎட விடயத்தில் நீங்கள் சாதித்த விடயம் என்ன ....உங்கள் தலைவரை தேவை நிமித்தம் சந்தித்தால் அரசியல் பிரசங்கம் செய்வதன் நோக்கம் என்ன ....சங்கிலயன் சிலை விடயத்தில் உண்மையில் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியாத ...ஊடகங்கள் பொய் சொல்கிறன என படம் காட்டும் உங்கள் தலைவரின் நோக்கம் என்ன ....
அரச பிரதிநிதிகள் கோட்டபாய உட்பட தமிழர் வரலாறை திரிப்பு படுத்த முயட்ட்சிகும் போது ஏன் நீங்கள் அரச பிரதிநிதியக மௌனம் காகிரிர்கள் ..
உங்கள் தலைவர் உட்பட பெண்கள் விடயத்தில் உங்கள் அமைப்பினால் பாதிக்கபட்டவர்களுக்கு என்ன பதில்
முடிந்தால் நேர்மையாக அரசியல் செய்யுங்கள் ..எங்கள் அப்பாவி ,வறுமையில் வாடும் மக்கள் பாவம்..கடந்த காலங்களில் தேர்தலுக்க நீங்கள் கொடுத்த செல்லதா கசோளைகளுக்கு என்ன நடந்தது ..ஒரு மாதத்தில் ராணுவத்தை வெளிஎட்டுவன் என சொன்ன உங்கள் தலைவரின் இன்றைய நிலைப்பாடு என்ன ...மூன்று மதத்தில் நாவற்குழி சின்ஹல குடிஎட்டத்தை முடிப்பதாக சொன்ன உங்கள் தலைவரின் இன்றைய நிலை என்ன
காசு வாங்கி சட்டத்துக்கு புறம்பாக வேலை பெற்று கொடுப்பதன் நோக்கம் என்ன..அரச ஆதரவில் ஊள்ளூர் சபை செயட்படுகளை குழப்புவதன் நோக்கம் என்ன ..
ஊடக கலாசாரம் பட்டி பேசும் நீங்கள் உங்கள் ஊடக்கன்க்களில் என்ன செய்கிறிர்கள் ....சந்திரிக்கா காலத்தில் வடக்கு கிழக்கு இன்னைப்பு ,சுய அட்ட்சி என பேசிய நீங்கள் இன்று ஓட்டை அட்சி,வடக்கு கிழக்கு இன்னைக்க முடியாது எனவுனம் சொல்வது தான் சந்தரவத அரசில்யல் ..அதற்கு நீன்ஹல் சொலும் பெயர் யதார்த்த அரசியல் ....நன்ற்க்க குழப்புகிரிகள் ...பதின்மூன்றம் திருத்தும் பட்டி பெர்ரித்க பேசும் நீங்கள் அதில் உள்ள மோசடிகள் என்ன என்று தெரியாத ....அது எங்கள் பிரச்சனிக்கு பொருத்தம் என நீங்கள் நினகிரிரிர்களா ..அப்படியாயின் ஏன் பதினெட்டம் திருததிட்கு அதரவு அளிதிர்கள்
இது பாவம் .....
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.