செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

மனித மலங்களை ஊற்றி கொடுமை செய்யும் இலங்கைப் படைகளின் அதி உட்ச அராஜகம்:-அரசியல் கைதியின் வாக்குமூலம்

 

globaltamilnews.net மற்றும் GTBC FM ற்கு சிறையில் இருந்து வழங்கிய வாய்மூல சாட்சியம்:-

 மனித மலங்களை வாளியுடன் ஊற்றி கொடுமை செய்யும் இலங்கைப் படைகளின் அதி உட்ச அராஜகம்:- தமிழ் அரசியல் கைதியின் வாக்குமூலம்:-

குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் ற்கு சிறையில் இருந்து வழங்கிய வாய்மூல சசாட்சியம்:-

வவுணியா சிறைச்சாலையில் தமிழ்  அரசியல் கைதிகளின் அவலம்:-

நீதிமன்றங்களின் உத்தரவுகளை உதாசீனம் செய்து அடாவடித்தனம் புரியும் பாதுகாப்பு அமைச்சு:-

அரசியல் கைதி சரவணபவன் எங்கே? ஆவரை எம் முன் நிறுத்தும் வரை எமது அகிம்சைப் போராட்டம் தொடரும் என்கின்றனர் கைதிகள்:-

வவுனியா சிறைச்சாலையில் 31 அரசியல் கைதிகள் இருக்கின்றோம். பத்திரிகைகளில் வந்த செய்திகள் மக்களுக்கு காட்டும் விதத்தில் மிகபை;படுத்தப்படுத்தி வந்துள்ளது. சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. அது அகிம்சை ரீதியில்தான் நடந்திருக்கு. அரசியல் கைதிகள் இதுவரையில் அகிம்சை ரீதியில்தான் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எந்த விதக் காரணம் கொண்டும் நிர்வாகத்தின் செய்றபாடுக்ளை நிறுத்தவோ முடக்கவோ நாங்கள் போகவில்லை என சிறையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் ஜீரீபீசி எவ் எம்ற்கு வழங்கிய செவ்வியில் சிறைக் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். நாங்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தைதான் எங்கள் கோரி;க்கைகளை முன்வைத்து மேற்கொள்கின்றோம்.
 
அந்த வகையில் 25ம்திகதி மாலையளவில் சரவணபவன் என்ற சக அரசியல் கைதி ஒருவரை அனுராதபுரம் பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றின் வழக்கின் பிரகாரம் அனுரபாதபுரம் சிறைச்சாலைக்கு இங்கிருந்து மாற்றினார்கள்.  இடம்மாற்றிய வேளை அவருக்கு அங்கிருந்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகளுடன் சில முரண்பாடுக்ள ஏற்பட்டன. அதாவது நாங்கள் இங்கு எமது விடுதலை கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் அது தொடர்பில் அவர்களுடன் கருத்து முரண்பாடு இருக்கின்றது. அதையும் அனுராதபுரம் காவற்துறை அத்தியட்சகருக்கெதிராக ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையும் பயன்படுத்தி சரவணபவனை தனது அலுவலகத்தில் வைத்து கிரிக்கட் விக்கட்டுக்களால் காவற்துறை அதிகாரி அடித்திருக்கின்றார். அதனை நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம் என சிறையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் ஜீரீபீசி எவ் எம்ற்கு வழங்கிய செவ்வியில் சிறைக் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். அன்றிரவே அவரைக் கொண்டு போய் ஏனைய குற்றச் செய்லகளுடன் சம்பந்தப்பட்ட புத்திசுயாதீனமற்ற கைதிகளுடன் சேர்த்து ஒரு அறையில் போட்டு அடைத்திருக்கினம். அங்கு கொண்டு போகும் போதே அந்தக் கைதிகள் பொலிஸ் அத்தியட்சகருக்கு முன்பே அவருக்கு அடித்திருக்கினம்.
 
கையில்லாதவர்கள் பயன்படுத்தும் ஊன்றுகோலைப் பயன்படுத்தி அவருக்கு அடித்திருக்கினம். நெஞ்சில் குத்தியிருக்கினம். தள்ளியிருக்கினம். இதையெல்லாம் அத்தியட்சகர் பார்த்துக் கொண்டிருந்தார். இதுதவிர அவரை தனிமையில் போட்டு அடைத்து அவரை இதுவரை ஒரு சிறைச்சாலையில் நடைபெறாத செயற்பாட்டை அவர்மீது மேற்கொண்டுள்ளனர். அதாவது சிறைச்சாலைக்கு பொறுப்பானவருக்கு முன்பாக அவரது அடிவருடிகள் எனச் சொல்லப்படுகின்ற 02 கைதிகள் அவர்மீது மனித மலங்களை வீசியிருக்கின்றனர். ஒரு தடைவ அல்ல 3 , 4 தடவைகள் வீசியிருக்கினம். அறைக்குள் அடைத்து வைத்து விட்டு கதவு கம்பிக்களுக்குள்ளால் கிட்ட வரச்சொல்லிப் போட்டு வாளியால் அள்ளி ஊற்றியிருக்pன்றார்கள். இதனை அந்த காவற்துறை அதிகாரி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்து விட்டுப் போயிருக்கின்றார்.
 
சரவணபவன் எவ்வாறு மண்றாடிக் கேட்டும் அவரை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. மறுநாள் காலையில் அவரைக் குளிக்கவும் விடாமல் சாப்பாடும் கொடுக்காமல் அறையில் வைத்திருக்கின்றார்கள். மறுநாள் காலையில்; அவன் காலில் விழுந்து குழறியதை அடுத்து ஏனைய அதிகாரிகளின் உதவியுடன் காவற்துறை அதிகாரியுடன் அவரது அலுவலகத்தில் போய்க் கதைத்த பின்பும் உடைகளும் மாற்றப்படாமல் அதே உடையுடன் அவனை அடித்ததுடன் மீண்டும் சிறையில் போட்டு அடைத்திருக்கின்றார்கள். இப்ப இந்தக் கைதி எங்கிருக்கின்றார் என்ற தகவல்களே இல்லை. அவர் தனது நீதிமன்ற வழக்குகளுக்கு போனாரா அல்லது போகவில்லையா என்பது கூட தெரியவில்லை. எந்த அதிகாரிகளிமும் இது பற்றிக் கேடட்டால் அவர்கள் அதுபற்றிக் கதைக்க மறுக்கின்றார்கள் என சிறையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் ஜீரீபீசி எவ் எம்ற்கு வழங்கிய செவ்வியில் சிறைக் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
திட்டமிட்ட வகையில் அந்த பொலிஸ் அதிகாரியின் ஒத்துழைப்புடன் அவரை அகற்றியிருக்கினம். ஊடகங்களில் இந்தச் செய்தி மிகை;பப்டுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஒரு சிறிய சிறைச்சாலை. எங்களிடம் கூரிய ஆயுதங்கள் இல்லை. இதுவரை எத்தனையோ அகிம்சைப் போராட்டங்களை செய்திருக்pன்றோம். நிர்வாகத்திற்கும் நிர்வாக செயங்பாடுகளுக்கும் நாங்கள் எவ்வித இடையூறுகளும் செய்ததில்லை.
 
சரவணபவனுக்கு வவுனியா மேல்நீதிமன்றத்திலும் வழக்கு இருக்கு. அவரை விட ஏனைய 02 கைதிகளையும் பூசா சிறைச்சாலைக்கு மாற்றியிருக்கினம். அது எந்த வகையில் என்று சொன்னால் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் உத்தரவின் பேரில் அவரது கையொப்பத்துடன் ஒரு கடிதத்தை பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் கொண்டு வந்து கோர்ட்டில் முற்படுத்தியிருக்கினம். அரச சட்டத்தரணி ஊடாக முற்படுத்தும் போது அந்தக் கடிதத்திற்கு நீதமன்றமும் எதிர்பு தெரிவிக்கில்லை. சட்டத்தரணியும் எதிப்பு தெரிவிக்கவில்லை. அதில் இருக்கின்ற விடயம் என்னவென்றொல் 15/1 என்ற சட்டத்தில் கணேஸ்வரன் என்ற கைதிக்கு நீதிமன்ற விசாரணை முடிந்து புனர்வாழ்வுக்கு போகிறாயா என நீதபதி கேட்டு அவர் ஓம் என்று 26ம் திகதி என திகதியும் நிர்ணயிக்கப்பட்டது. நீதிபதி அந்த உத்தரiவு வழங்கும் போது அரச சட்டத்திரணி தான் கொண்டு வந்த உத்தரவை நீதிமன்றிற்கு வழங்கி உத்தரவை பெற்று அவரை பூசா சிறைச்சாலைக்கு மாற்றிவிட்டினம். அவருடன் இன்னுமொரு கைதி. அவருக்கு தொடையுடன் கால் இல்லை. அவர்கள் போட்ட உடுப்புடனேயே வீட்டுக்காரர் கூட பார்க்கவில்லை. போனார்கள். அவர்களது உடமைகளையும் எடுக்கவிடவில்லை என சிறையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் ஜீரீபீசி எவ் எம்ற்கு வழங்கிய செவ்வியில் சிறைக் கைதி ஒருவர் வாக்குமூலம் அளித்தார்.
 
அவரது செயற்கைக்கால் இங்குதான் இருக்கு. ஆவர் கொமட்டில்தான் இருப்பார். அவரது மருந்துகளோ உடமைகளோ எடுக்கவில்லை. மாற்றக் கூட உடைகளே இல்லாத நிலையில் அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை பூசா சிறைச்சாலைக்கு மாற்றியிருக்கினம். இதனைக்கும் கோர்ட்சுக்கு முன்னால் அவரது மனைவி கத்திக் குழறி அழ  அவரை வீதியில் தள்ளி விழுத்தி அவரது ஊன்று கோலையும் பறித்து எறிநிது விட்டு அவரை இழுத்துக் கொண்டு போய் வாகனத்தில் ஏற்றியிருக்கினம். அவருக்கு 4 பிள்ளைகள் இருக்கினம். இதை ஊடகங்களுக்கும் கொடுத்துள்ளோம். நேரில் பார்த்தவாகள் சொன்னார்கள்.
 
தீர்ப்பு என்று சொல்லிவிட்டு எங்களை நீதிமன்றத்திற்கு எடுத்து போட்டு இப்ப எங்களுக்கு இருகின்ற பாதுகாப்பான ஒரு இடம் நீதிமன்றம்தான். எங்களை 5 வருட ஒப்பற்தத்தில் நீதிமன்றிற்கு எடுத்துவிட்டு நாங்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனச் சொல்லி  நாங்கள் உள்ளே இருக்கின்ற போதே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனச் சொல்கின்ற அரசாங்கம் 5 வருடங்களின் பின் எங்களை வெளியெ விடும் என்பது என்ன உத்தரவாதம். எங்களது உயிருக்கு என்ன உத்தரவாதம். நாங்கள் வெளியில் போய் இச் செயலை செய்ய மாட்டம் என அரசாங்கம் ஏன் யோசிக்கேல்லை. நாங்கள் ஏற்கனவே 4 வருசம் சிறைச்சாலையில் மிகவும் மன உளைச்சலுடன் குடும்பங்களைப் பிரிந்து இருக்கிறம். இதை நாங்கள் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டும் என்றில்லை. நாங்கள் எவ்வளவு தூரம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறம். இன்னுமொரு தனிமையான இடத்தில் எங்களது உறவுகளை சந்திக்க முடியாத இடத்திற்கு எங்களை தனிமைப்படுத்திக் கொண்டு போகப் போகினம் என்று சொல்லினம்.  அங்க என்ன நடக்கின்றது என்ற உண்மை நிலை எங்களுக்கு தெரியாது.
 
நாங்கள் அந்த செயற்பாட்டை நிறுத்தச் சொல்லேல்ல.  சரவணபவனுக்கு நடந்ததற்கான முழுமையான காரணத்தை காட்ட வேண்டும். அவரைக் கொண்டு வந்து காட்டி விட்டு எங்கையாவது கொண்டு போங்கள் என்றுதான சொல்லியிருக்கிறம். அவருக்கு மிகவும் கீழ்தரமாக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். அவரை கொண்டு வந்து காட்டி விட்டு கொண்டு போங்கள் என்றுதான் சொன்னனாங்கள். நீதிமன்றத்தை புறக்கணிப்போம் என்றுதான் சொன்னனாங்கள். ஆனால் இன்று நாங்கள் நீதிமன்றத்திற்கு எல்லாரையும் அனுப்பியிருக்கிறம்.
 
வெளியில் ராணுவத்தை கொண்டு வந்து குவித்திருக்கினறர்கள். எங்களுக்கு முன்னால் உள்ள வீதியை பொது மக்களின் போக்குவரத்திற்கு முற்று முழுதாக தடை செய்திருக்கினம். விசேட அதிரடிப்படையை குவித்திருக்கினம். ராணுவத்தை குவித்திருக்கினம். பொலிசை குவித்திருக்கினம். நாங்கள் யாரும் இங்கிருந்து தப்பி போக முயற்சிக்கவி;லலை. அந்த எண்ணம் எங்களிடம இல்லை. நாங்கள் நேர்மையாக நீதிமன்றத்தின் ஊடாகத்தான் போக இருக்கின்றம்.
 
சிறைச்சாலையிலிருந்து தப்பிப் போகின்ற அளவிற்கு கேவலமான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டம். எங்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இதுவரை எங்கள் போராட்டத்தை கைவிடவிலலை. சரவணபவன் இஙகே வர வேண்டும்.
 
நாங்கள் உறுதியாக சொல்லுறம். நாங்கள் நீதிமன்றத்திற்கு கட்டுப்படுகின்றம். அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு தலைவணங்கிறம். அதை செவ்வனே செய்வதற்குதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறம். சரவணபவனை ஏமாற்று வழியாக எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டு போயிருக்கிறியள். அவரை கொண்டு வந்து காட்ட வேண்டும். இதுதான் எங்களது கோரிக்கை என சிறையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் ஜீரீபீசி எவ் எம்ற்கு வழங்கிய செவ்வியில் சிறைக் கைதி ஒருவர் வாக்குமூலம் அளித்தார்.
 

 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.