இரண்டு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகுககள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளை புகலிடக்கோரிக்கையாளர்கள் அடைந்துள்ளனர். முதலாம் படகில் 44 இலங்கையர்கள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்மஸ் தீவுகளின் பிளைங் பிஸ் கேவ் என்னும் இடத்தில் இந்த படகுப் பயணிகள் தரையிறங்கியுள்ளனர். இந்தப் படகைத் தொடர்ந்து மற்றுமொரு படகும் கிறிஸ்மஸ் தீவுகளை சென்றடைந்துள்ளதாகஅந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை 93 இலங்கையர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவை அடைந்துள்ளது. கிறிஸ்மஸ் தீவுகளில் சுமார் 1300 பேர் தற்போது தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.