விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ஷிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

 

ஷிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

 

 
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம்செய்துள்ளார். மேனன், நேற்றிரவு கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தைசென்றடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதிகள் சில மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பூர்த்தியசெய்யப்படாமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்டமுக்கியஸ்தர்களை மேனன் சந்திக்க உள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்குஆதரவளித்ததன் பின்னர் நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை என்பதனால் இந்த விஜயம்முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
யதார்த்தமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு முனைப்பு காட்ட வேண்டும்என்பது குறித்து மேனன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.