விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

பொதுவான எதிர்க்கட்சி ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது –கரு ஜயசூரிய

 

பொதுவான எதிர்க்கட்சி ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது –கரு ஜயசூரிய

 

 
பொதுவான எதிர்க்கட்சி ஒன்றின் அவசியம் வெகுவாக எழுந்துள்ளது எனஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில்அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனஅவர் வலியுறுத்தியுள்ளார்.
 
சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்வதாகக்குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த சிக்கல்களிலிந்து மக்களை திசை திருப்பும் நோக்கல் அரசாங்கம்அவசரமாக தேர்தல்களை நடாத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
18ம் திருத்தச் சட்ட மூலம் அமுலில் இருக்கும் வரையில்சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
 
போலியான முறையில் தேர்தல்களில் வெற்றியீட்டி அதன் மூலம் சர்வதேசசமூகத்தை ஏமாற்றுவதே அரசாங்கத்தின் திட்டம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
பெரும் அளவிலான மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் தருணத்தில்அரசாங்கம் பொதுமக்கள் பணத்தை வீரயம் செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அரசாங்க பாடசாலைகளுக்கான 4 ஆயிரம் தகவல் தொழிற்நுட்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்க உள்ளார். ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் இந்த வைபவம் இன்று நடைபெறவுள்ளது. 
 
 
 
 
தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் ஆயிரம் பாடசாலைகளுக்கு இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.