விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வடமாகாண தேர்தலை நடத்தாதன் மூலம் உத்தேச நாடாளுமன்ற

 

தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் சீர்குலைக்கப்பட்டுள்ளது :

வடமாகாண தேர்தலை நடத்தாதன் மூலம் உத்தேச நாடாளுமன்ற

 

 
வடமாகாணத்திற்கு தேர்தல் நடத்தாதன் மூலம் நாட்டின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண நோக்கில் ஏற்படுத்தப்படவிருந்த உத்தேச நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை அரசாங்கம் மீண்டும் சீர்குலைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணி நேற்று (28) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சுமத்தியது.
 
வட மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்தி, அங்குள்ள மக்கள் தாம் விரும்பிய வகையில், மாகாண சபையை ஏற்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்காது, அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட்டு வரும் மக்களின் மனநிலையை திசை திருப்புவதற்காக கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
 
 
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க,  புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர, ஐக்கிய சோஸலிஷ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ருகுணு மக்கள் கட்சியின் செயலாளர் அருண சொய்சா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
 
 
வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது குறித்து அவர்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டனர். வட மாகாண சபைத் தேர்தலை நடத்த போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதியளித்திருந்தார் என்பதையும் கட்சித் தலைவர் நினைவூட்டினர். அவ்வாறு வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் என்றும் பொது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
வடக்கில் முதலில் தேர்தலை நடத்துவதில்லை என்று அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் காரணமாக மனித உரிமை பேரவையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர்கள் எதிர்வு கூறியுள்ளனர். வட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறும், மக்களுக்கு ஊதியத்தை அதிகரித்து நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிர்க்கட்சிகள் நடத்த தீர்மானித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பொது எதிர்க்கட்சிகளின் தலைவர் கூறியுள்ளனர். 
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.