செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வவுனியா சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரம் ஊடாக மகர சிறைக்கு மாற்றப்பட்ட கைதி நிர்மலரூபன் மரணம் - 6ஆம் இணைப்பு:-

 

6ஆம் இணைப்பு:-

வவுனியா சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரம்   ஊடாக மகர சிறைக்கு மாற்றப்பட்ட கைதி நிர்மலரூபன் மரணம்

வவுனியா சிறையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மஹர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிர்மலரூபன் மரணமடைந்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, அங்கிருந்து மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இந்த மரணத்திற்கான காரணம் சரியாக இதுவரை கண்டறியப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரத்திற்கு அழைத்துச் சென்ற மூன்று அரசியல் கைதிகளை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி,  வவுனியா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் நடத்தியிருந்தனர். அவர்கள் மூன்று அதிகாரிகளை 16 மணிநேரம் பிணையாக பிடித்து வைத்திருந்தாக கூறி, அதிரடிப்படையினரின் உதவியுடன் சிறைச்சாலை சுற்றிவளைக்கப்பட்டது.

இதன் போது, கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டதாக வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தகவல்கள் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த கைதிகள் தென் பகுதி சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட கைதியே உயிரிழந்துள்ளார்.

வவுனியா சிறையில் கடுமையாக தாக்கப்பட்டால் அவர், சுகவீனமடைந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

எனினும் இந்த சிறைக்கைதிகளின் விவகாரத்தில் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகள் நேரடியாக செய்திகளை நேரடியாக வழங்கியது என்ற வகையில் இந்த கைதியின் மரணத்திற்கு சிறைச்சாலை நிர்வாகமும் அமைச்சரும் அரசாகமுமே நேரடியாகப் பொறுப்பு கூற வேண்டும் என குளோபல் தமிழ்ச் செய்திகள் உறுதியாகக் கூறுகிறது. 50 மண்வட்டிப் பிடிகளுடன் உட்புகுந்த அரசாங்கத்தின் அட்டூளியப் படைகளே இந்தக் கைதிகளை மீருகத்தனமாக தாக்கியிருந்தன. ருத்தக் காயங்களுடன் மாற்றுடையின்றி கை கால்கள் முறிந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கiதிகளில் இன்னும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மகர சிறைச்சாலைத் தரப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  5ஆம் இணைப்பு:- வவுனியா அரசியல் கைதிகள்  கை கால்கள் முறிந்த நிலையில் மகர சிறைச்சாலையில் போடப்பட்டுள்ளனர்? குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்

02-07-2012 - 10:32:-

வவுனியா சிறைச்சாலையில் இருந்து  அரசியல் கைகதிகள் 30 பேரில்  27 பேர்  நேற்று நள்ளிரவைத் தாண்டி இன்று அதிகாலை  மணியளவில் மகர சிறைச்சாலையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக மகர சிறைச்சாலையிலிருந்து  குளோபல்hதமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த 27 பேரும் கை , கால்கள் உடைந்த நிலையிலும் , உடைகள் மாற்றப்படாமலும் ரத்தம் தோய்ந்த உடைகளுடனும்  காயங்களுடனும்; உணவு கூட வழங்கப்படாத நிலையில் கொண்டு வந்து  போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த 30 பேரில் மிகுதி  3 பேரின் நிலை மிகவும்   கடுமையான பாதிப்பிற்குள்ளான நிலையில் ராகம இல்லது கம்பகா பிரதேசத்தில உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் குளோபல்hதமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.

 

 4ஆம் இணைப்பு:- வவுனியா சிறையிலிருந்து 28 தமிழ்க் கைதிகள் அவசரமாக அநுராதபுரத்துக்கு மாற்றம்!

29-06-2012 11.20

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அங்கிருந்த 28 கைதிகள் பலவந்தமாக அநுராதபுரம் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 15 பேர் கடுமையான காணமடைந்த நிலையில் இருப்பதாகவும் அதில் மூவரின் நிலை மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள் மிகவும் மேசமான முறையில் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

வவுனியா சிறைச்சாலையில் அதிகாரிகள் மூவர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்துக்கு குறிப்பிட்ட 28 தமிழ்க் கைதிகளுமே பொறுப்பெனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம், இன்று நண்பகல் பணயக்கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்ததையடுத்து குறிப்பிட்ட 28 பேரையும் அம்புலன்ஸ் மற்றும் சிறைச்சாலை வாகனங்களின் மூலமாக அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பலாத்காரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட போது இவர்களில் 15 பேர் மிகவும் மேசமாகக் காயமடைந்திருந்தனர். சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினரும், அதிரடிப்படையினரும் தாக்குதல் நடத்தியபோதே இவர்கள் காயமடைந்ததாகத் தெரிகின்றது. இவர்களில் மூவருடைய நிலை மிகவும் மோசமாக இருந்ததாக வவுனியா சிறைச்சாலையிலிருந்து கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இவர்கள் அனைவரும் மருத்துமனைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தனியான அறை ஒன்றில் அடைக்கப்பட்ட இவர்கள் மீது இன்று பிற்பகல் முதல் கடுமையான தாக்குதல்களும் சித்திரவதைகளும் இடம்பெறுகின்றது. தடிகள், கம்பிகள் என்பவற்றுடன் சப்பாத்துக் கால்களாலும் இவர்கள் தாக்கப்படுவதாக அநுராதபுர சிறைச்சாலையிலிருந்து கசிந்துள்ள தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இவர்களுடைய கதறல் சத்தத்தை அநுராதபுரம் சிறைச்சாலையின் பல பகுதிகளிலும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.

3ஆம் இணைப்பு:

றணகளமான வவுனியா சிறைச்சாலை – 50 மண்வெட்டிப் பிடிகள் வாங்கிய அதிரடிப்படையினர்காயமடைந்த கைதிகள் இராணுவ வைத்திய சாலையில்? குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்

 

 

இன்று காலை வவுனியா சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள கடையில் 50 மண்வெட்டிப் பிடிகளை விசேட கலகம் அடக்கும் அதிரடிப் படையினர் வாங்கி உள்ளனர். சிறைச்சாலைக்கு உள்ளே புகுந்த போது தமிழ் அரசியல் கைதிகளின் கைகள் கட்டப்பட்டு கண்கள் கட்டப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு உள்ளனர். சில மணி நேரம் சிறைச்சாலை றணகளமாக மாறியிருநந்தது என குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கிறார். கண்ணீர் புகைப் பிரயோகம் தண்ணீர் பாச்சுதல் உள்ளட்ட அனைத்து பலாத்காரங்களையும் பிரயோகித்த அதிரடிப் படையினர் தமிழ் அரசியல் கைதிகள் பிடித்து வைத்திருந்த சிறை அதிகாரிகளை மீட்ட பின் மண்வெட்டிப் பிடிகள் மற்றும் குண்டாந் தடிகள் பொல்லுகளால் கடுமையாக தாக்கி சிறைச்சாலை வண்டிகளில் ஏற்றி அனுராதபுரப் பக்கம் கொண்டு சென்றுள்ளனர். கடுமையான காயங்களுக்கு உள்ளான கைதிகள் அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கிறார். எனினும் இலங்கையில் தற்போது தலைவிரித்தாடும் ஊடக அடக்கு முறை அராஜகம் என்பவற்றால் இந்த தகவலை எவரிடமும் உறுதிப் படுத்த முடியவில்லை.

2ஆம் இணைப்பு:- வவுனியா சிறைக்குள் அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டனர்!
05:38am

வவுனியா சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் பணயமாக பிடித்துவைத்துள்ள சிறை அதிகாரிகள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மீட்பதற்கு விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டதாக வவுனியா சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் இருக்கும் சிறைக்கூண்டுப் பகுதிக்கு கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டு பின்னர் அவர்கள் மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.

எனினும், கைதிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.

வவுனியா சிறைச்சாலை வழாகசுற்றுப்புறச் சூழலில் பெரும் பதட்டம்-தமிழ் அரசியல் கைதிகளின் நிலை அபாயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை:-

04 :44am

வவுனியா சிறைச்சாலை வழாகம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பெரும் பதட்டத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தமிழ் அரசியல் கைதிகளின்நிலை பெரும்அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலமைகள் சுமூகமான தீர்வை நடவடிக்கையை எடுக்குமாறு கைதிகள் கோரியுள்ளனர்.

இன்று இலங்கை நேரம் காலை முதல் கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து சிறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு, கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் நீர்பாச்சி அடிக்கும் வாகனங்கள் சகிதம் வவுனியா சிறைச்சாலை சுற்றி வளைக்கப்பட்டு உள்ளதாக கைதிகள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர்.

மனித மலங்கள் வீசப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமது சக கைதி சரவணபவனை தமக்கு காட்ட வேண்டும் வவுனியா சிறைக்கு அவர் மிண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைதிகள் முன்னெடுத்தனர்.

எனினும் இதற்கு சாதக பிலை வழங்காத சிறைச்சாலை நிர்வாகம் நேற்று வியாழக் கிழமை பலாத்காரமாக உணவை வழங்க முற்பட்டதோடு 15ற்கு மேற்பட்ட சிறைக் காவலர்கள் கைதிகளை தாக்கியுமுள்ளனர். இதன்போது 3 அதிகாரிகளை சிறைப்பிடித்த தமிழ்க் கைதிகள் கடந்த 12 மணி நேரத்திற்கு மேல் அவர்களை தம்முடன் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாது பாதுகாப்பாக தாம் வைத்திருப்பதாக கைதி ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.
 
இவர்களை விடுவிக்குமாறு நேற்று மாலை வவுனியா நீதவான் ஏணி மூலம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வழாகத்துள் இறக்கப்பட்டு 1 மணிநேர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் கைதிகள் தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அவர்களை விடுவிக்க முடியும் எனக் கூறியுள்ளனர்.
 
கடந்த இரவு அசம்பாவிதம் எதுவும் இன்றி கழிந்ததாயினும் இலங்கை நேரம் காலை கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் கட்டடத்திற்கான மின்சாரம், தண்ணீர் முற்றாக தடைப்படுத்தப்பட்டு உள்ளதாக கைதி ஒருவர் இன்று காலை சிறையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகள் ஆசிரியருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.தாம்வன்முறையை நேக்கி செல்லவில்லை எனத் தெரிவித்த அவர் தமது சக அரசியல் கைதிக்கு நடந்த மிகக் கொடூரமான மனித சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியை உரியவர்களிடம் தட்டிக் கேட்டு அதற்கு தீர்வு வழங்குமாறே அகிம்சைவழியில் போராடியதாக கூறினார். அடுத்து வரும் கணங்கள் என்னவாகுமோ எனத் தெரியாது எனத் தெரிவித்த அவர் இந்த நிலமையை கட்டுக்குள் கொண்டுவர சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
 
28 ஜூன் 12 06:10 (GMT)
globaltamilnews.net மற்றும் GTBC FM ற்கு சிறையில் இருந்து வழங்கிய வாய்மூல சாட்சியம்:-
 
28 ஜூன் 12 06:04 (GMT)
சிங்கள மொழி மூலக் குரலில் - இதனை உங்கள் சிங்கள நண்பர்களுக்கு பரிமாறுங்கள்
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.