நல்லிணகக் முனைப்புக்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வழமையான கருத்து பரிமாறல்களின் அடிப்படையில் இலங்கை விஜயம் அமைந்துள்ளது என மேனன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பு உறவுகள், அண்மைய நிலவரங்கள் போன்ற விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மீள் குடியேற்றம், நல்லிணக்கம் போன்ற துறைகளில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும் வரையில், 2008ம் மீனவர் பிரச்சினை தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் இரு நாடுகளும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்
இலங்கை சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.
இலங்கைக்கு சிவசங்கர் மேனன் நேற்று இரவு சென்றடைந்தார். இன்று காலை அவர் மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். சிவசங்கர் மேனனுடன் இந்திய இணை செயலாளர் ஹர்ஷ்வர்தனும் சென்றிருந்தார்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமை, மறுசீரமைப்பு பணிகள், வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளம் தெரிவிக்கிறது.
மேலும் இலங்கையின் கிழக்கில் சம்பூரில் இந்தியா உதவியுடன் அமைக்க திட்டமிட்டுள்ள அனல் மின் நிலையம் பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.