விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்தவை அரியாசனையில் இருந்தியவருமான மங்களவுக்கு

 

பதில்அளிக்கும் அவசியம்இல்லை -மங்களவுக்கும் புலனாய்வாளர்களுக்கும் இடையிலான வாய் தர்க்கம் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்தவை அரியாசனையில் இருந்தியவருமான மங்களவுக்கு பதில் அளிக்கும் அவசியம் இல்லை என்கிறார் புலனாய்வாளர்.

நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், பாதுகாப்பு தரப்பினர் எவரையும் கைது செய்ய முற்படும் போது அதனைக் கேள்வி கேட்க முடியும். எந்த அடிப்படையில் ஊடகவியலாளர்களை கைது செய்வது என மங்கள சமரவீர கேட்ட கேள்விக்கு புலனாய்வாளர் கூறுகிறார் அது பற்றி உங்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என சிங்களத்தில் நடக்கும் காரசாரமான அந்த வாய் தர்க்கம் கிளே தரப்படுகிறது.

மங்கள : இவர்களை நாங்கள் சட்டத்தரணிகளுடன் அனுப்புகிறோம்.
 
அதிகாரி இல்லை சேர் அவர்கள் அவரலாம் எந்த பிரச்சினையுமில்லை.
 
மங்கள: இவர்களை நீங்க கைதுசெய்துள்ளீர்களா?
 
அதிகாரி: அவர்களுக்கு நான் விளக்கினேன் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
 
மங்கள : எதனை ஏற்றுக்கொண்டனர். இவர்களை கைதுசெய்துள்ளீர்களா இல்லை என்றே கேட்கிறேன்....
 
அதிகாரி :ஆமாம் சேர் இவர்களை கைதுசெய்துள்ளோம்.
 
மங்கள : இங்கிருந்த 9 பேருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிகவும் நன்றி... இவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு என்ன?.
 
அதிகாரி: இங்கு கம்பியூட்டர்கள் இருக்கின்றன.
 
மங்கள : அது தவறா?.
 
அதிகாரி: சேர் என்னை பேசவிட வில்லையே...
 
மங்கள : கூறுங்களேன்
 
அதிகாரி. சேருக்கு கூறவேண்டிய அவசியமில்லை.
 
மங்கள : நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்>காவற்துறை நிலையத்திற்கு கூட எந்த நேரத்தில் சென்றுஇ ஏதேனும் கைது மேற்கொள்ளப்படுமாயின்இ அது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை இருக்கின்றது.
 
அதிகாரி : அது சரியானதுதான்.

மங்கள: அப்படியானால் தயவு செய்து கூறுங்கள்.
 
அதிகாரி : இங்கு இரண்டு கணனிகள் உள்ளன. அதில் தேவையான தரவுகள் இருக்கின்றன. அதனை இயக்கிய இரண்டு பேர் முன்னிலையில் அவற்றை பதிவு செய்து கொண்டோம். இந்த கணனியில் அவர்களை தவிர இங்குள்ளவர்களும் பிரவேசிக்க முடியும் என அவர்கள் கூறியதால்இ நாம் அவர்களையும் கைதுசெய்கிறோம். தேவை ஏற்படும் பட்சத்தில் விசாரணைகளை நடத்தி மேலும் அதனை உறுதிப்படுத்திஇ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மங்கள : கெலும் கைதுசெய்யக் கூடிய அளவில் கணனியில் இருக்கின்ற தரவுகள் என்ன. இது சட்டப்படி இயங்கும் சுதந்திரமான ஊடக அமைப்பு. . நீங்கள் எடுத்துள்ள தரவுகள் என்ன?.
 
அதிகாரி : நாங்கள் நீதிமன்றத்தில்....
 
மங்கள : சத்தம் போட வேண்டாம் எனக்கு நன்கு காதுகள் கேட்கின்றன.

அதிகாரி : நான் சத்தம் போடவில்லை சேர்... என் குரலின் சத்தம் அப்படித்தான்.
 
மங்கள : சரி குரல் சத்தத்தை குறைத்து விட்டு பேசுங்கள்.
 
அதிகாரி : அரசாங்கத்திற்கு எதிரான சில தகவல்கள் எமக்கு தெரியவந்தது.
 
மங்கள : ஆமாம் இது அரசாங்கத்திற்கு சார்பானது அல்ல. இது எதிர்க்கட்சியை சேர்ந்தது. எதிர்க்கட்சிகள் இருப்பது அரசாங்கம் செய்யும் அதனையும் நல்லது எனக் கூறுவதற்கு அல்ல.  அப்படியானால் குற்றவியல் சட்டத்தின் 118 மற்றும் 120 கீழ்தான் இந்த கைதுகளை மேற்கொண்டுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள்.
 
அதிகாரி : சரி.
 
மங்கள : சரி. இதனை ஆரம்பத்திலேயே கூறியிருக்கலாமே. கூறியிருந்தால் சரிதானே.  காரணம் இது எந்த குற்றவியல் சட்டமானாலும் இது கோட்டாபயவின் நரச்சட்டம் என்றே நான் கூறுகிறேன். அதனை சொல்லுங்கள் மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.  இந்த சந்தர்ப்பத்தில் இருந்து அமெரிக்கா முதல் உலகில் உள்ள அனைத்து நாடுகளும்இ உங்களது இந்த நரச் சட்டம் மற்றும் திருட்டுச் சட்டம் என்ன என்பதை அறிந்து கொள்ளும். நீதிமன்ற நடவடிக்கை என்றே நான் இதுவரை அமைதியாக இருந்தேன்
 
அதிகாரி : சேர் நாங்கள் விசாணை நடத்துகிறோம்.......... அதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். நீங்கள்தான் இந்த சட்டங்களை அமுல்படுத்துகின்றீர்கள். இதனால் சேர் போன்றவர்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது காவற்துறையினர் என்ற வகையில்இ  ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
 
மங்கள : நாங்கள் ஒத்துழைப்பு வங்கினோம்.... இவ்வளவு நேரம் நாங்கள் மிகவும் அமைதியாக ஒத்துழப்பு வழங்கினோம். ஒரு புறம் ஒதுங்கி நாங்கள் மிகவும் அமைதியாகவே இருந்தோம். முழுமையான ஒத்துழைப்பை வழங்கினோம். இந்த நிலையில் 118- 120 என்ற குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த அப்பாவிகளை கைது செய்துள்ளதாக திடீரொன கூறுகிறீர்கள்.  அவர்கள் தமது பேனாவை பயன்படுத்தியமைக்காக கைதுசெய்யதால் நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா.
 
அதிகாரி : இல்லை சேர்.... இதற்கு சாட்சியங்கள் இருக்கின்றன... அதனை நாங்கள் நீதிமன்றத்தில் கூறுகிறோம்.... அப்போது அதற்கு எதிராக சேர் எதனையும் கூறவேண்டியிருந்தால் நீதிமன்றத்தில் கூறலாம்....
 
மங்கள : மங்கள அதனை நாங்கள் செய்கிறோம்.... சட்டரீதியான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கின்றோம், ஆனால் இதுதான் கோட்டாபய ராஜபக்ஷவின் அடக்குமுறை ஒடுக்குமுறை சட்டம் என்பதை இந்த நேரத்தில் நான் கூறுகிறேன். இந்த இடத்தில் இதனை நான் தெளிவாக கூறுகின்றேன்....
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.