வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென் கொண்டிருந்த பயணிகள் பேருந்து, நேற்று மாலை புனித செப்பல் சந்தியில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளானதில், 36 பயணிகள் காயடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 10 இராணுவத்தினரும், ஒரு காவற்துறை அதிகாரியும் அடங்குகிறார்.
சம்பவத்தில்p காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், படுகாயத்திற்கு உள்ளன 12 பேர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.