இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாககுறைந்தபட்சம் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டுவெளியேறியுள்ளனர்.
சுமார் ஒரு மில்லியன் பேர் இவ்வாறு வீடுகளை விட்டுவெளியேறியுள்ளதுடன், 27 மாவட்டங்களில் 21மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக பெய்துவரும் பருவ மழை காரணமாக அஸாம் மாநிலம்பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக மாநிலத்தில் சுமார் 90,000 பேர்இடம்பெயர்ந்துள்ளதாக மாநில விவசாய அமைச்சர் நிலேமனி சென் தேக்கா தெரிவித்துள்ளார்.
1998ம் ஆண்டின் பின்னர் மாநிலத்தில் இடம்பெற்ற மிக மோசமான வெள்ளஅனர்த்தம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.