செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

TNA -புலம்பெயர் தமிழர்களின் தூண்டுதல் காரணமாகவே வவுனியா சிறைச்சாலை கைதிகள் வன்முறையாக செயற்பட்டனர்

 

- புலனாய்வு பிரவு

TNA -புலம்பெயர் தமிழர்களின் தூண்டுதல் காரணமாகவே வவுனியா சிறைச்சாலை கைதிகள் வன்முறையாக செயற்பட்டனர்

 

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலிகளுக்கு புலம்பெயர் தமிழர்களின் தூண்டுதல் காரணமாகவே, வவுனியா சிறைச்சாலையில் இருக்கும் விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் வன்முறையாக செயற்பட்;டுள்ளதாக பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
 
இதன் மூலம் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் பலமாக இருப்பதாக வடபகுதி  தமிழர்கள் மத்தியில் கருத்தொன்றை ஏற்ப:த்தி, தமிழ் மக்களை விடுதலைப்புலிகளுக்கு சார்பாக வைத்திருப்பதே இவர்களின் நோக்கம் என புலனாய்வு பிரிவை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில், ஆர்ப்பாட்டங்களை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் நிலவும் அமைதி மற்றும் அபிவிருத்தி பணிகள் காரணமாக அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில், பிரிவினைவாதம் என்ற மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 
 
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தனது அரசியல் பலத்தை அதிகரித்து கொள்ள இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. தனது அரசியல் பலத்தை தக்கவைத்து, வவுனியா சிறைச்சாயைலில் போன்று சம்பவங்களை ஏற்படுத்தி, இன்னும் விடுதலைப்புலிகளின் பலம் இருப்பதாக தமிழ் மக்களை ஏமாற்றி, வட-கிழக்கில் நடத்தப்பட உள்ள தேர்தலில் வெற்றிப்பெறவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகிறது எனவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
எவ்வாறாயினும் இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் கேட்ட போது, வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்திற்கும் தமது கட்சிக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.