செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

இலங்கையின் தலைவிதி இந்தியாவின் கைகளில்...

 

இலங்கையின் தலைவிதி இந்தியாவின் கைகளில்...

 

 
இலங்கையின் தலைவிதி இந்தியாவின் கைகளில் என இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் காலமதிப்பீடு தொடர்பான கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் மூன்று நாடுளில் இந்தியாவும் ஒன்று என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகியனவே ஏனைய இரண்டுநாடுகளாகும்.
 
குறித்த இரண்டு நாடுகளுக்கும் இலங்கை தொடர்பில்பாரியளவு கரிசனை கிடையாது எனவும், இந்தியாவே இலங்கை தொடர்பில் அதிகளவு கரிசனைகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் சகல இன சமூகங்களும் சமஉரிமையுடனும், சுயகௌரவத்துடனும் வாழக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
13ம் திருத்தச் சட்ட மூலம் மூன்றில் இரண்டுபெரும்பான்மை பலத்துடன் இலங்கையில் சட்டமாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அமுல்படுத்துவதும்அமுல்படுத்தாமல் விடுவதும் அரசாங்கத்தின் தீர்மானமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.