செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

அரசியல் தீர்வு ஒன்றை துரிதமாக முன்வைக்குமாறு இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது - சிவசங்கர் மேனன்

 

2ம் இணைப்பு - ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு, இந்தியா கண்மூடித்தனமாக ஆதரவளிக்காது
 
 
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு,இந்தியா கண்மூடித்தனமாக ஆதரவளிக்காது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர்மேனன் தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் சர்வதேச கால மீளாய்வு அமர்வுகளின் போது, இலங்கையின் மனித உரிமைநிலைமைகளின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என கருதமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளுடன் இணைந்து இலங்கை மனித உரிமைவிவகாரம் குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளும் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
தமிழக அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் காரணமாக இந்திய மத்தியஅரசாங்கம் கடந்த மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததாகஇலங்கையின் உயர் மட்ட அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
உண்மையில் இந்த நிலைப்பாடு பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசியல் தீர்வு ஒன்றை துரிதமாக முன்வைக்குமாறு இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது - சிவசங்கர் மேனன்
02-07-2012 01:44
 
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கும் அரசியல் தீர்வு ஒன்றை துரிதமாக முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக  இந்திய தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.  இலங்கையின் வட மாகாணத்திற்கு தேர்தலை நடத்துவது தொடர்பில் சில யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் நேற்று இந்திய ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
 
கடந்த 29 ஆம் திகதி முடித்துக்கொண்ட தனது இலங்கை விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கத்துடன் விரிவாக பேசியதாகவும் தமது யோசனைகளுக்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் சாதகமான பதில் கிடைத்ததாகவும் மேனன் கூறியுள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.