யுத்தத்தின் போதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் உயிரிழந்தாகவும், பின்னர் அவரது சடலம் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து பிரசூரமாகும் தமிழ் ஊடகமொன்றுக்கு அளித்தசெவ்வியல் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் இளைய புதல்வரின் சடலம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போதுகிடைக்கப் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் மற்றும் அவரது சிரேஸ்டபுதல்வர் ஆகியோரின் சடலங்களை படையினர் மீட்டதாகவும், அவரது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள்பற்றிய தகவல்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில சிறுவர் போராளிகள் உள்ளிட்ட ஏனைய போராளிகளின் சடலங்கள ;கிடைக்கப் பெற்றதாகவும், அநேகமானவர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரனின் சடலம் மீட்கப்பட்டதாகவும், அது வேறு யாரது சடலமும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தn;வாரு போராளியும் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லை எனவும், அவ்வாறு சரணடைந்திருந்தால் அவர்களுக்கு அடைக்கலம் வழங்குமாறுபடையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.