ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில் ஆளும்கட்சியினர் விமர்சனப் பாங்கான தரப்பினரின் கருத்துக்களை முடக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு வழிகளில் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக மனிதஉரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் மீதான கெடுபிடிகள் இலங்கை தொடர்பான நன்மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச்செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய தளங்களை முடக்குவதனை விடுத்து சுமத்தப்பட்டு வரும்குற்றச்சாட்டுக்களுக்கு சரியான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முனபைபு காட்ட வேண்டுமென அவர்வலியுறுத்தியுள்ளார்.
மூன்று தசாப்த கால யுத்தத்தில் இரண்டு தரப்பினரும் ஊடகவியலாளர்களைதாக்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
விமர்சனப் பாங்கான கருத்துக்களை வெளியிடும் ஊடகவியாளர்களுக்குதேசத்துரோக முத்திரை குத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்சம்பவங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படுவதில்லைஎன அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.