இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிக்கான நிர்வாக சபை இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் தலைமை காரியாலத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞைரணி செயலாளர் சிவகரன் தலைமையினில் இன்று இக்கூட்டம் இடம்பெற்றிருந்தது. யாழ்.மாவட்ட இளைஞரணி கிளையின் தலைவராக பிரதேச சபை அங்கத்தவரான கஜதீபனும் செயலாளராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளரான தர்சனாந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரே அண்மையில் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை 25 பேரை கொண்ட நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டுமுள்ளது. நிகழ்வினை ஆரம்பித்து வைத்து வாழ்த்துரையினை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா ஆற்றியிருந்தார். ஏற்கனவே வவுனியா மாவட்டத்திற்கான தெரிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்து வன்னி மற்றும் கிழக்கில் தெரிவுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.