செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

கொழும்பிலிருந்து சென்ற சுகாதார அமைச்சு அதிகாரியின் செயற்பாட்டில் திருப்தி இல்லை எஸ்.நிலமன்:-

 

கொழும்பிலிருந்து சென்ற சுகாதார அமைச்சு அதிகாரியின் செயற்பாட்டில் திருப்தி இல்லை எஸ்.நிலமன்:-

 

கொழும்பிலிருந்து சென்றுள்ள சுகாதார அமைச்சு அதிகாரியின் செயற்பாட்டில் தமக்கு திருப்தி இல்லை என்றும் திட்டமிட்டபடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பக்கட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி எஸ்.நிலமன் குறிப்பிட்டார்

யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் பணிப்பாளருக்கும் இடையில் நிலவுகின்ற முரண்பாடுகள் தொடர்பாக சமாதான நிலையை ஏற்படுத்துவற்கு நிர்வாக நிலையில் உள்ள அதிகாரியாகிய வைத்தியக் கலாநிதி ஆனந்த குணசேகர யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் செய்துள்ளார். அவர் வைத்திய நிபுணர்கள் மற்றும் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா ஆகியோரை உள்ளடக்கி கலந்துரையாடல் ஒன்றை இன்று நடாத்தியிருந்தார்.

 

குறித்த கலந்துரையாடலில் போதனா வைத்தியசாலையின் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் விடங்கள் தொடர்பில் விரைவில் விசாரணை துரிதப்படுத்த விருப்பதாகவும், அதுவரை பொறுமையாக இருக்கும்படியும் வைத்திய சங்கத்தைக் கேட்டுக்கொண்டதாக வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி எஸ்.நிலமன் பின்னர் கருத்து தெரிவித்திருந்தார். கொழும்பில் இருந்து சென்ற அமைச்சின் அதிகாரியாகிய ஆனந்த குணசேகராவின் கலந்துரையாடல் ஒரு சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருந்ததே அன்றி முறைகேடுகள் தொடர்பான ஆரோக்கியமான கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை என்றும் பணிப்பாளர் தொடர்பாக 202 வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தியுறுத்தி வருகின்றமையை கருத்தினில் கொள்ளவில்லையெனவும் மருத்துவ சங்கம தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.