செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

காணி - காவற்துறை அதிகாரங்களுடன், அதிகாரத்தை பரவலாக்க உடனடியாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் -

 

ராஜித சேனாரட்ன

காணி - காவற்துறை அதிகாரங்களுடன்,  அதிகாரத்தை பரவலாக்க உடனடியாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் -

 

இலங்கை அரசாங்கம் அச்சமின்றி, முன்னோக்கி சென்று, சர்வதேசம் எதிர்பார்க்கும் விதத்தில், காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன்,  அதிகாரத்தை பரவலாக்க உடனடியாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்ன  தெரிவித்துள்ளார்.

உலகில் பல நாடுகள் அதிகாரங்களை பரவலாக்கியுள்ளன, எனினும் அந்த நாடுகளில் இதனால் எந்த கெடுதியும் ஏற்படவில்லை எனவும் இலங்கையில்  உள்ள கட்சிகளில் பெருபாலானவை காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன், அதிகாரத்தை பரவலாக்குவதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர்  கூறியுள்ளார்.

ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.  இந்த சந்தர்ப்பத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண  நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒரு சிறந்த நடவடிக்கையாகும். சம்பந்தன் போன்றவர்களையும் இதில் இணைத்து கொண்டு, அதனை பரீட்சித்து பார்க்க  வேண்டும். தற்போதைய அரசாங்கத்தில் உள்ள பலர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுடன் அரசியல் தீர்வுக்காக இணைந்து செயற்பட்டவர்கள். 

12 வருடங்கள் சந்திரிக்காவுடன் பணியாற்றிய அவர்களுக்கு மறுப்பாடான நிலைப்பாட்டுக்கு திரும்ப முடியாது. விஜய குமாரணதுங்கவின் மக்கள் கட்சி, கம்யு 10னிஸ்ட் கட்சி,  சமசமாஜ கட்சி, வாசுதேவவின் கட்சி, தமிழ் கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம்கட்சிகள் அதிகாரம் பரவலாக்கப்படுவதை விரும்புகின்றன.

2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் 13வது அரசியல் அமைப்புக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை  வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. எனினும் அதனை இதுவரை செய்யவில்லை. இந்த உறுதிமொழி காரணமாகவே சர்வதேச சமூகம் போரில்  வெற்றிப்பெற உதவி செய்தது. 13வது அரசியல் அமைப்பு திருதத்தை அமுல்படுத்த குறைந்தப்பட்சம் அமைச்சரவையின் அனுமதிக் கூட தேவையில்லை. 

காரணம் அது நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம். ஜனாதிபதி அதனை அமுல்படுத்த முடியும். உலகில் பல நாடுகள் அதிகாரங்களை பரவலாக்கியுள்ளன.  13வது அரசியல் அமைப்பு திருத்ததில் இந்தியாவில் உள்ளவிட குறைவான அதிகாரமே பரவலாக்கப்பட்டுள்ளது. காணி மற்றும் 

காவற்துறை அதிகாரங்களை வழங்குவது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.