இணைந்து செயற்பட அவுஸ்தி ரேலியாவும், இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன
சட்டவிரோத குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்லும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக பொதுவான நடவடிக்கைகளை எடுக்க இணைந்து செயற்படுவது என அவுஸ்திரேலியாவும், இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன.
கடந்த மாதத்தில், ஆசிய அகதிகளை ஏற்றிய இரண்டு படகுகள் கடலில் மூழ்கிய சம்பவங்களை அடுத்து எழுந்துள்ள நிலைமை தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர்,இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிளாட்டுடன் நடைபெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர், கருத்து வெளியிட்ட இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பங்க் யுடயுனோ, தமது நாடு சட்டவிரோத குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்லும் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களினால் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக கூறியுள்ளார்.
ஆசிய அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் அண்மையில் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் கடலில் மூழ்கியன. முதல் விபத்தில் மாத்திரம் 90க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.