வாழ்க்கையை கொண்டு நடந்த வழியில்லாத காரணத்தில் கொழும்பில் மாத்திரம் தற்போது பெருமளவிலானவர்கள் தமது உடலை விற்று வருவதாகவும் இதனால் ஆசிய கலாசாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்pன் வரலாறு தொடர்பான விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் உள்ள 5 வயதுக்கும் குறைவான வயதுள்ள பிள்ளைகளில் 21.06 வீதமான குழந்தைகள் போஷாகின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். போஷாக்கு இல்லாத எதிர்கால தலைமுறையினரையே அரசாங்கம் உருவாக்கி வருகிறது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தேவையான போஷாக்கான உணவை வழங்க கணவரால் முடியாத நிலைமை காணப்படுகிறது. இதனால் மந்த போஷாக்குடன் மூளை வளர்ச்சியற்ற குழந்தைகள் பிறக்கின்றன எனவும் தம்பர அமில தேரர் கூறியுள்ளார்.