விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

சிறார்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

 

விதிக்கப்பட வேண்டும் - அனோமா திஸாநாயக்க

சிறார்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

 

சிறார்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தாம் மீண்டும் ஒரு முறை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க எண்ணியுள்ளதாக சிறுவர் விவகார திணைக்களத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை விடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தற்போது, 20 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையே வழங்கப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
அதேவேளை இலங்கையில் தற்போது, சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் இவ்வாறான சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சியை சேர்ந்த பிரதேச சபைத் தலைவர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார். 
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.