செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

குடாநாட்டில் அரச நியமனம் பெற்ற பட்டதாரிகள் சும்மா இருக்கப் பணிக்கப்பட்டுள்ளனர் :

குளோபல்தமிழ்ச்செய்தியாளர் :

குடாநாட்டில் அரச நியமனம் பெற்ற பட்டதாரிகள் சும்மா இருக்கப் பணிக்கப்பட்டுள்ளனர் :

யாழ்..குடாநாட்டில் அரச நியமனம் பெற்ற பட்டதாரிகள் முன்னெடுக்க வேண்டிய வெலைகள் தொடர்பாக எந்தவொரு அறிவுறுத்தல்களும் மாவட்ட செயலகங்களிலிருந்து பிரதேச செயலகங்களை சென்றடையாமையால் சும்மா இருக்கப்பணிக்கப்பட்டுள்ளனர்.யாழ்.குடாநாட்டில் மட்டும் வேலையற்றிருந்த இரண்டாயிரத்து 38 பேருக்கு தற்போது வேலை வாயப்பினை வழங்கும் வகையில் நியமனங்கள் வழங்கப்பட்டள்ளது.நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் அனைவருக்கும் பயிற்சிகளை வழங்கப்போவதாக கூறி அவ்வப்பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கான இட ஏற்பாடுகளோ பயிற்சி தொடர்பான அறிவுறுத்தல்களோ  அரசால் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனால் சும்மா இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட பட்டதாரிகள் வெட்டியாகப்பொழுதை கழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.பட்டதாரிகளுக்கு எத்தகைய பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக எந்தவொரு அறிவுறுத்தல்களும் தமக்கு இதுவரை கிட்டியிருக்கவில்லையென  செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாகாண சபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் அவசர அவசரமாக இடம்பெற்றவருகின்றது.முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டமையாகவே இம்முறை வேலையற்ற பட்டதாரிகளது நியமனம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைப்பாளர்களால் வழங்கப்பட்டிருந்தது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(11) அபிப்பிராயங்கள்
04-07-2012, 19:06
 - Posted by Siva.
வேலை வாய்ப்புப் பெற்ற பட்டதாரிகளுக்கு எமது வாழ்த்துக்கள்! பதவி நியமனக் கடிதங்கள் யாரால் வழங்கப்பட்டாலும், அவர் தன் சொந்த நிறுவனத்துக்காக, இந்த வாய்ப்பை வழங்கவில்லை என்பதையும், தன் சொந்தப் பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்போவதில்லை என்பதையும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்! உங்கள் தகுதிக்குரிய, உங்களுக்கு உரிமையானதைத்தான் இவ் அரசு கொடுக்கிறது என்பதை, யாரும் மறந்துவிடக் கூடாது. சுயநல நோக்கோடு காலமறிந்து அரசு செய்பவற்றுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டுமென்று எண்ணாது, கிடைக்கும் ஊதியத்துக்கு வஞ்சனை இல்லாது கடமை உணர்வுடன் செயற்படுவதே, நியாயமாகும்!
04-07-2012, 21:09
 - Posted by Anonymous
சும்மா இருக்கபணிக்க படவில்லை, வரப்போகின்ற தேர்தலுக்கு சேவை செய்வதற்க்கா நியமிக்க பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை.
04-07-2012, 21:57
 - Posted by Solomon
வேலை வாய்ப்புப் பெற்ற பட்டதாரிகளுக்கு எமது வாழ்த்துக்கள்!
தாய் நாடாம் இலங்கை திருநாட்டில் அரிவரி துவக்கம் நீங்கள் பட்டம் தந்த பல்கலைக்கழகம் வரையிலான கல்வி இலவசமாக பெற்றுக் கொண்டீர்கள் என்பதனை தயவுசெய்து மறந்து விடாதீர்கள். வெளிநாடுகளில் பல்கலை கழக படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் 95 % மான பட்டதாரிகள் பெரும் கடன் சுமையுடனேயே தமது வாழ்கையை துவங்குகிறார்கள். நீங்கள் அதிஸ்டசாலிகள் .
வாழ்க வளமுடன். வெளிநாடுகளில் இருந்துகொண்டு உசுப்பத்தும் "பார்டி " களை பற்றி உங்கள் அறிவுக்கண் கொண்டது இனம் கண்டு கொள்ளுங்கள்.
நன்றிக் கடன் செலுத்துவது தமிழர் பண்பாடு , கிடைக்கும் ஊதியத்துக்கு வஞ்சனை இல்லாது கடமை உணர்வுடன் செயற்படுவதே, நியாயமாகும்!
04-07-2012, 23:19
 - Posted by Anonymous User
இத்தால் அண்ணன் சொல்வது என்னவென்றால் தானும் பல்கலைக்கழத்தில் படித்தவரராம், சும்மா சொல்லக்கூடாது அண்ணனின் அரை குறை ஆங்கிலம் அவியாமல் விட்ட பின்பு தாய் மொழியாம் தமிழில் துள்ளு நடை போட முய்ற்ச்சிக்கின்றார், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்,
05-07-2012, 01:36
 - Posted by Anonymous
இலங்கையில் பல்கலை கல்வி அவசியமான ஒன்று அல்ல .உண்மையில் இது மாணவர்களின் வாழ்கையில் ஒரு சுமை நிறைந்த காலம் என சொல்லலாம் .பல்கலை கல்வி முறை தோற்று வருகின்ற ஒரு விடயம் என கூட சொல்லலாம் ...நிறைய அரசியல் ,போட்டி ,பொறமை என அது ஆரோகியமான விடயமாக இல்லை ..கடந்த ஒரு மதம் போராட்டம் நடந்து ஒரு கிழமையின் பின்னர் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகிவிட்டது ....இலங்கை அதிபர் துணை வேந்தரை நியமிக்கும் விடயங்களில் தொடக்கி எல்லா இடமும் குளறுபடி ..4 வருட கல்விக்கு பலர் நிறைய வருடங்கள் செலவழிக்க வேண்ட்டி இர்ருகிறது ...இந்த வகையில் இலங்கை அரசாங்கம் தன் குறுகிய அரசியல் நன்மைக்காக பட்டதாரி மாணவர்களை எமாற்றி வருகிறது ...4 வருட பலகலை கல்வியில் படித்த கல்விக்கும் அரசாங்கம் கொடுக்கும் வேலைக்கும் (பல வருடங்களின் பின் ) ஒரு சம்பதமும் கிடையாது .கலைத்துறை மாணவர்கள்,வணிக துறை மாணவர்கள் ,விஞ்யான மாணவர்கள் எல்லோரும் அரச தினைகளங்களில் எழுதுவினன்யர்களாக இணைக்கபடுகிரர்கள் ..'அங்கு அவர்களுக்கு ஒழுங்கான கடமைகள் ,பொறுப்புகள் வழங்கபடுவதில்லை ..அரசு நியமனங்கள் வழங்கும் போது கூட அவர்களின் கடமைகள்,பொறுப்புகள் ,உரிமைகளை தெளிவாக வரையறுப்பதில்லை
இங்கே அவர்களுக்கு மிக குறைந்த சம்பளமே வழங்க படுகிறது ..அதே சமயம் பல்கலை கல்வி கிடைக்காத மாணவர்கள் இந்த 4 ஆண்டுகளில் தொழில் சார் அனுபவ சாலிகளாக அதிக சம்பளம் பெற கூடிய நிலைமை காணபடுகிறது ...போட்டி பரிட்சை அடிப்படையில் குறைவான மாணவர்களே தெரிவாகும் பல்கலை கழகங்களில் உரிய பயன் மாணவர்களின் எதிர் கால வாழ்க்கைக்கு இல்லை எனும் போது ஏன் நாங்கள் அதிகமான காலத்தை பல்கலை கழகத்தில் செலவு செய்ய வேணும் ..இன்றைய இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் 30% அதிகமான பட்டதாரிகள் அரச 3 am தர ஊழியர் போட்டி பரிட்சையில் தோற்றி அங்கு பணியர்ருகிரர்கள் (இதற்குரிய கேட்கப்பட்ட தகுதி உயர் தரம் )....இந்த நிலையில் பல்கலை கழக கல்வி என்பது என்ன நோக்கத்திற்கு என்ற கேள்வி எழுகின்றது ..மாணவர்கள் தங்கள் கல்வியை பயன் படுத்த தேவை அற்ற தொழில் பெறுகின்ற போது..தங்கள் சிறப்பு தேர்ச்சியை உப யோகிக்க முடியாத சூழ் நிலையில் அவர்கள் எப்படி வினை திறனாக பணியாற்ற முடியும் ?????அவர்களின் பங்களிப்பு எப்படி பொது மக்களுக்கு சிறப்பனா சேவை வழங்க பயன் படும் ????......ஒரு விஞ்சான சிறப்பு பட்டதாரி ஒரு லிகிதர் எனும் நியமனம் பெரும் போது அவர் எப்படி இலங்கையின் அரச சேவைக்கு சிறப்பாக பண்ணிய்ற முடியும்
இது பெரும் பாலும் வசதி குறைந்த வடக்கு கிழக்கு மாணவர்களை பாதிக்கிறது....வசதியான .செல்வாக்கான பலர் அரச தொழில் துறைகளை நம்பி இருப்பதில்லை ..தென் இலங்கையில் பலர் சமாந்திரமாக பல்கலை கல்வியுடன் தொழில் கல்வியும் கற்று சிறப்பான இடங்களை பெற முடிகிறது ..ஆனால் எங்களுக்கு அந்த வாய்ப்பு குறைவு ..இந்த தடவை அரச கட்சியில் வலு கட்டாயமாக பலர் இணைக்க பட்ட பின்னரே நியமனம் வழங்கப்பட்டது ..
பல ஆண்டுகளுக்கு முன்னரே தோற்று போன இலவச கல்வி இன்று பல்கலை கல்வியையும் அதன் நோக்கதியும் அழித்து விட்டது என்பது சோகமான உண்மை ...இந்த சோகத்தில் சொலமன் போன்ற சில அடிப்படை அறிவு குறைந்தவர்கள் அரசியல் செய்வது மட்டமான வேலை ...
05-07-2012, 11:14
 - Posted by Siva.
தமிழனாகப் பிறந்தும் தமிழே புரியாத, தமிழில் ஒரு சிறு விமர்சனத்தைத்தானும் எழுத்துப் பிழைகளின்றிச் சரியாக எழுத முடியாத கணனிச் சிங்கம் சொலமனுக்கு, எதையும் புரிய வைக்க நான் முயலவில்லை! ( புலி என்ற வார்த்தை அவருக்கு ஒவ்வாது. சொறி, சிரங்கு என்று அவஸ்தைப்படுவார்! பாவம்.) மாறாக, பதவி கொடுத்து வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கும், ஐந்து வருடக் குத்தகைக்கு நாட்டை எடுத்து ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் கொடுத்த, பட்டதாரிகளுக்கே உரிய பதவி நியமனங்களைப் பெற்ற நன்றி உணர்வில், யாரும் தமது வலிமையான வாக்கைத் துஷ்பிரயோகம் செய்துவிடக் கூடாது, என்ற விழிப்புணர்ச்சி மக்களுக்கு வரவேண்டும், என்பதே என் விருப்பம். கல்வியும், பட்டம் பதவிகளும் தந்த, நாம் பிறந்த நம் தாய் நாட்டுக்கு நன்றி விசுவாசம் காட்டக் கூடாது, என்று நான் சொல்ல வில்லை. ஐந்து வருடம் உயிர் வாழும் அரசுக்கும், நாட்டுக்கும் இடையேயான வித்தியாசத்தைக் கூட புரியாதவர்கள் குறித்து அனுதாபப்படாமல் இருக்க முடியவில்லை. இன்றுவரை, நான் பல அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் பதவி நியமனங்கள் பெற்றுக் கடமையாற்றியிருக்கிறேன். ஆனால், என்றைக்கும் எனது பதவி நியமனக் கடிதத்தை, அரச தலைவரிடமிருந்தோ, பிரதமரிடமிருந்தோ அன்றித் துறை சார்ந்த மந்திரியிடமிருந்தோ, குறைந்த பட்சம் நான் சார்ந்த பிரதேசத்தைப் பிரதிநிதித்துத்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்தோ கூடப் பெறவில்லை! பின், இவர்கள் மட்டும் ஏன் அலரி மாளிகையிலும், வீரசிங்கம் மண்டபத்திலும் அரச வளங்களை வீணடித்து, விழா எடுத்துப் பதவி நியமனங்களை வழங்குகிறார்கள்? வாக்கு வேட்டைக்கன்றி வேறெதற்கு? யாழ் குடாவில் மட்டும் 2038 நியமனங்கள்! திடுமென்று இவ்வளவு வெற்றிடங்கள் எங்கிருந்து வந்தன? அரச ஊழியர்களை அண்மையில் சுனாமி காவு கொண்டதாகக் கூடத் தகவல் இல்லையே? இவ்வளவு வெற்றிடங்களையும் இன்றுவரை அரசு நிரப்பாதது, மக்களுக்குச் செய்த துரோகமில்லையா? அண்மைய நியமனங்களில், ஐந்து வருடங்களுக்கு முன்பு பட்டம் பெற்றவர்களுக்கும், இந்த வருடம் பட்டம் பெற்றவர்களுக்கும் ஒரே தரத்தில் நியமனங்கள் வழங்கியிருக்கிறார்கள்! மூத்தவர்களின் மன உளைச்சல் யாருக்குப் புரியும்? அன்றாடம் ஏற்படும் பதவி வெற்றிடங்களை, உடனுக்குடன் நியமனம் செய்திருந்தால், சிலருக்கு ஐந்து வருடப் பதவி மூப்பு, இன்று கிடைத்திருக்கும்! பதவி மூப்பின் வலிமையையும் வேதனையையும், பதவி மூப்பை மட்டும் காரணம் காட்டி பிரதமர் பதவியை பறிக்காத குறையாகப் பெற்றுக் கொண்ட, நமது இன்றைய ஜனாதிபதி திரு மகிந்த ராஜபக்ஷவை விட வேறு எவராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது! சரியானதைச் சொல்வது, எவ்வகையில் உசுப்பேற்றுவதாகும்? வெளி நாடுகளில் கடன் பட்டுப் பட்டம் பெறுபவர்களுக்கே இல்லாத கவலை, இவருக்கு ஏன் வந்ததோ தெரியவில்லை? நமது பிரச்சனைகளை பிறர் பிரச்சனைகளுடன் ஒப்பிடுவது, விவேகமாகாது! இப் பகுதியில் பலரும் தம் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்! ஆனால் எல்லோரும் சொலமனுடன் மட்டுமே முரண்படுகிறார்கள்!, என்றால் தவறு எங்கு என்பதைக் கூறவும் வேண்டுமா?
05-07-2012, 11:19

05-07-2012, 13:04
 - Posted by Solomon
இத்தால் தம்பிக்கு சொல்வது என்னவென்றால், உங்கள் அறிவுடன் என்னை ஒப்பிடாதீர்கள். உங்கள் மேதாவி ஆங்கில , தமிழ் அறிவு வேறுயாருக்கு வரும்.? உங்கள் பாராட்டுகளால் புளகாங்கிதம் அடைந்தோம். ஏதோ வசிஷ்டர் நேரில் வந்து ஆசீர்வாதம் செய்த புல்லரிப்பு !. ஹ ஹ்...ஹா

05-07-2012, 01:36
- Posted by Anonymous அவர்கள் கூறி இருப்பது அத்தனையும் உண்மை. பொறியியலாளர் , மருத்துவர் பட்டம் பெற்று வெளியேறுபவர் தவிர மற்றவர்களின் பட்டங்களுக்கு சரியான தொழில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இது இலங்கைக்கு மட்டும் பொருத்தமானதல்லகிழக்கு மேற்கத்திய நாடுகளிலும் இந்த அவல நிலையை சாதாரணமாக காணலாம்.

அடுத்தது சிவா அவர்கள் கூறிய சின்னப்புள்ளை தனமான விசயங்களுக்கு வருவோம். முப்பது வருடமாக தமிழர்களை கொலை களத்துக்கு "தொழில் " வாய்ப்பு கொடுக்க பாடசாலைகளிலும் , வீடுகளில் இருந்தும் பலாத்காரமாக கடத்தி போன புலிகளை இந்த "தொழில்" வாய்ப்புடன் ஒப்பிடுங்கள். அத்துடன் வேலையற்ற பட்டதாரிகள்."வேலை வாய்ப்பு தரவேண்டும்" என்று தார்மீக போராட்டம் நடத்தியதை மறக்காதீர்கள். அதன் பெறுபேறுகளில் ஒன்று தான் இது. வேலை வாய்ப்பு கொடுக்காவிடாலும் பிதற்றுகிறீர்கள் . வேலை கொடுத்தாலும் பிதற்றுகிறீர்கள். பிடிக்காத மருமகளின் கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றம் பழமொழி தான் ஞாபகம் வருகிறது.

05-07-2012, 13:21
 - Posted by Solomon
//இப் பகுதியில் பலரும் தம் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்! ஆனால் எல்லோரும் சொலமனுடன் மட்டுமே முரண்படுகிறார்கள்!, என்றால் தவறு எங்கு என்பதைக் கூறவும் வேண்டுமா?// உலகில் எல்லா நாடுகளும் புலிகளை கொலைகார பயங்கரவாதிகள் என்று தடை செய்தது என்றால் தவறு எங்கு என்பதைக் கூறவும் வேண்டுமா?. அதுபோல தான் இதுவும்.
05-07-2012, 14:23
 - Posted by Irem
சொலொமன், பட்டதாரிகளைப் பற்றியெல்லாம் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ? உங்களது அரசியல்வாதிகள் தான் எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு தங்களது சிபாரிசுகளுடன் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கிறார்களே . எனக்குத் தெரிந்து பல ஊடக நிறுவனங்களில் கூட உறவினர், முன்வீடு , பின்வீடு , பக்கத்துக்கு வீடு என்று எல்லா சொந்த பந்தங்களுக்கும் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறது. பாதம் கழுவுபவர்கள் விசுவாசத்துடன் தான் இருக்க வேண்டும். அந்த விசுவாசத்தை உங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள் . உள்நாட்டில் உள்ள தமிழர்கள் எல்லாம் உங்கள் அகராதிப்படி புலிகள். வெளிநாட்டில் வாழ்பவர்கள் எல்லாம் துரோகிகள் . அப்படிஎன்றால் நீங்கள் நேசக் கரம் நீட்டக் காத்திருக்கும் தமிழர்கள் எங்கே இருக்கிறார்கள்? சுயநலம் ஒன்றே லட்சியமாக வாழும் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? எதோ மன ஆறுதலுக்காக கருத்து வெளியிடும் இந்தக் களத்திலும் உங்கள் விஷத்தைக் கக்காதீர்கள் .
05-07-2012, 15:22
 - Posted by Anonymous User
உலக நாடுகள் புலிகளை கொலைகார பயங்கரவாதிகள் என்று தடை செய்தது என்றால் தவறு எங்கே? பயங்கர வாதிகளை எப்படி கிளிநொச்சியில் சந்திக்க முடிந்தது வெளி நாட்டு பிரநிதிகளால்?? பயங்கரவாதிகளுக்கு எப்படி பேச்சு வார்த்தைக்கு வெளி நாடுகளில் இடம் கொடுத்தார்கள், இவர்களுடன் சமமாக இருந்து பேச்சு வார்த்தை நடத்திய ஜீ எல் பீரிசும், நிமால் டி சில்வாவும் பயங்கரவாதிகள் தானே? அது சரி இன்று தமிழின கொலைகாரன் என்றும் சர்வதேச போர்குற்றவாளியாக பிரகடனப் படுத்த வேன்டும் என்றும் சொல்லப்படும் ஒருவனை தூக்கி பிடித்து பேசுபவனும் ஒரு பயங்கரவாதியாக தானே இருக்க முடியும், பட்டு வேட்டிக் கனவில் வந்து இங்கிலாந்தில் கட்டிய கோவணத்தை பறி கொடுத்து ஓடியவன் பயங்கரவாதி இல்லையா, தனது நாட்டு தேசியகொடியை தூக்கி வீசிவிட்டு செல்பவனை பார்த்து புகழுபவனும் பயங்கரவாதிதானே, தமிழினத்தை பயங்கரவாதியென்று சொல்பவன் தனது இனத்துக்கு என்னமாதிரியான மரியாதை உலகத்தால் கொடுக்கபடுகின்றது என்று தெரிந்து கொன்டு பேசுவது தான் பயங்கரவாதிக்கு நன்று, ராஜன்.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
.