வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் ஒரு வருடத்திற்குள் கட்டாயமாக நடத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதற்கான சகல உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
30 வருடத்திற்கு மேலான காலம் வடக்கில் ஜனநாயகம் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதால், புதிய அரசியல் தலைமைகள் அங்கு உருவாகவில்லை எனவும் துப்பாக்கி மற்றும் தோட்டக்களின் அச்சமே அனைத்தையும் தீர்மானித்தது எனவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.