செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

பிரபாகரனை புதைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டோம்...

 

ஆனால் பிரிவினையை முன்னெடுக்க, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் தொடர்கிறன்றன:-

"பிரபாகரனை புதைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டோம்"...

 பிரபாகரனை புதைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டோம் ஆனால் பிரிவினையை முன்னெடுக்க, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் தொடர்கிறது:-

 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை உடனடியாக நீக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள அந்த கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய, கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பியசிறி விஜேநாயக்க, மிலேச்சத்தனமாக பயங்கரவாதத்தின் மூலம் மூன்று தசாப்தங்களாக நாட்டின் இரத்த களரியை ஏற்படுத்திய பிரபாகரனை புதைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டு, பிரிவினைவாதமும் இத்தோடு ஒழிந்தது என நிலைத்து கொண்டிருந்தோம்.

எனினும் பிரிவினைவாதத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு சூழ்ச்சியாளர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது ரகசியமான ஒன்றல்ல. நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பிரிவினைவாத புலி பயங்கரவாத்திற்கு எதிராக மனிதாபிமான நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியது மீண்டும் பிரிவினைவாத்தை தோற்றுவிப்பதற்காக அல்ல. பிரிவினைவாத சூழ்ச்சியாளர்கள் எவ்வாறு பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற வழியை தேடி வருகின்றனர்.

அமெரிக்காவுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை கொண்டு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா. சம்பந்தன் மட்டக்களப்பில் பிரிவினைவாத்திற்கு உந்து சக்தியை வழங்கும் ஆற்றிய நீண்ட உரையும் வெறுமனே நடைபெற்றவை அல்ல. பிரிவினைவாதத்திற்கு பாதையை வெட்டும் தேவை அவர்களுக்கு இருக்கின்றது.

வட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தற்போது, பிரிவினைவாத தேவைக்கு அமைய செயற்படுபவர்கள், புதிய கோஷம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதற்காக பிரதானமாக குரல் கொடுத்து வருகிறார். அமெரிக்கா, இந்தியா, புலம்பெயர் தமிழர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமல்ல, ஜே.வி.பியின் அனுரகுமார திஸாநாயக்க போல, சரத் பொன்சேக்கா போன்றவர்களும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

தற்போது வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுதல், இடம் பெயர்ந்தவர்களை மீளகுடியேற்றல், அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதுமாத்திரமின்றி, வாக்களார் இடாப்புகளை தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. வடக்கில் தேர்தல் நடத்தக் கூடிய பொருத்தமான காலத்தை ஏற்படுத்த இன்னும் காலஅவகாசம் தேவைப்படுகிறது. இந்த நாட்டை நேசிப்பவர்கள், பிரிவினைவாதத்திற்கு எதிரான மனசாட்சியுள்ள எவரும் இதனை உணர்ந்து கொள்வார்கள். 

இதனால் வடக்கில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என கோஷத்தை முன்னிலைப்படுத்துபவர்கள் பிரிவினைவாதத்திற்காக முன்நின்று செயற்படுபவர்கள் என்பது தெளிவானது. ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற வரதராஜ பெருமாள் என்ன செய்தார். வடக்கு கிழக்கை தனியான ஈழநாடு என அறிவித்து, ஈழ தேசியக் கொடியை ஏற்றினார். நாடு என்ற வகையில் நாம் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்டித்தது. பெருமாள்களுக்கு புலி ஆட்டம் ஆடுவதற்கு அல்ல. இந்த அரசாங்கம் பலமான அரசாங்கம்,  இரண்டு மூன்று பெருபான்மை பலத்துடன் உள்ள அரசாங்கம், இதனால் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை நீக்க முடியும். இதற்கான துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். 

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.