வவுனியா சிறைச்சாலையில் இருந்த புலிகளின் தலைவர்கள் மற்றும் ஏனைய புலிப்பயங்கரவாதிகள் நோர்வே மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் செய்மதி தொலைபேசி ஊடாக அடிக்கடி ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
நோர்வேயில் உள்ள புலிகளின் தலைவர் நெடியவனின் இணையத்தளம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ள ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலரும் வவுனியா சிறையில் இருந்த இந்த கைதிகளுக்கு உதவியுள்ளனர்.
விசேட அதிரடிப்படையில் வவுனியா சிறையில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வரை அவர்கள் தமக்கு தகவல்களை வழங்கியதாக புலிகளின் இணைத்தளங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய புலிப்பயங்கரவாதிகளை பார்ப்பதற்காக தமிழ் அரசியல்;வாதிகள் மூன்று பேர் சென்றிருந்தனர் என பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.