செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

6 மாதங்களில் 650 கடத்தல்கள்!-மகிந்த சகோதரரர்களின் மாபெரும் சாதனை:-தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள்

 

6 மாதங்களில் 650 கடத்தல்கள்!-மகிந்த சகோதரரர்களின்  மாபெரும்  சாதனை:-தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள்


 

கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 650 பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையொன்று சுட்டிக்காட்டுவதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர். எனினும், இதுகுறித்து எதுவும் தெரியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் 15,000 பேர் காணாமல் போயுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பசுபிக் வலயம் தொடர்பான 2011ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இம்மாதம் 5ஆம் திகதி சிங்கள ஊடகவியலாளர் சாந்த விஜேசூரியவை கடத்துவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததுடன், நாட்டில் வேறு பல கடத்தல் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

கடந்த வருடம் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட மக்கள் எழுச்சி இயக்க உறுப்பினர் லலித், குகன் ஆகியோர் குறித்து இதுவரை எவ்விதத் தகவல்களும் வெளியாகவில்லை. அத்துடன், இவ்வருட ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி மாலை, சிவலிங்கம் சிவகுமார் என்ற தமிழ் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவமும் பதிவானது.

இந்தச் சம்பவம் நடந்து 05 தினங்களின் பின்னர் அதாவது ஏப்ரல் 18ஆம் திகதி அவரது சடலம் யாழ்ப்பாணம் தொண்டமானாறு பிரேசத்தில் மீட்கப்பட்டது.

இந்த அனைத்துச் சம்பவங்களிலும் ஒற்றுமை என்னவெனில், இவர்கள் எந்தவொரு நபரையும் பொலிஸார் கைதுசெய்யவில்லை என்பதாகும்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் கடத்தல்களுடன் பாதுகாப்புத் தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டிருக்கின்றனர் என அண்மையில் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை தொடர்பான அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கொலன்னாவ நகர சபைத் தலைவரை கடத்திச் செல்ல முயற்சித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வெள்ளை வேன் தரப்பினர், பிரதேச மக்களின் சுற்றிவளைக்கப்பட்டனர். எனினும், பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கமைய, பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க நேரடியாக வந்து அவர்களை மீட்டுச் சென்ற சம்பவமும் இந்த வருடத்திலேயே பதிவான ஒன்றாகும்.

வெள்ளை வேன், கடத்தல் ஆகியன இலங்கையில் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. இந்த நிலையில், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மிகமோசமாக காணப்படுகிறது.

இராணுவத்தினரைப் போலவே, துணை இராணுவக் குழுக்களும் அந்தப் பிரதேசங்களில் ஆள்கடத்தலில் நேரடியாக ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கடத்தல்கள் குறித்து எதுவும் தெரியாது எனக் கூறுவது கேலிக்குரியவிடயமாகவே இருக்கிறது.

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
08-07-2012, 16:48
 - Posted by Siva.
இந்த லட்சணத்தில், கிழக்குக்கும் வேறு இரு மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது! கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில், (வெற்றிலைச் சின்னத்தில்?) முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த உள்ளார்களாம்! எதிர் வரும் நாட்களில் கிழக்கில், அச்சுறுத்தல், கடத்தல், கொலைகளுக்குப் பஞ்சமிருக்காது! இவற்றுக் கெல்லாம் முகம் கொடுத்து, ஏனைய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதும், வெல்வதும் மிகச் சவால் நிறைந்த விடயமாகவே இருக்கப் போகின்றது! தமிழர் பிரதேசத்தில், பிரதேசத்துக்கே சம்பந்தமில்லாத பெரும் பான்மைக் கட்சி, தேர்தல் இட ஒதுக்கீடு செய்வது போன்ற ஒரு விந்தையை, உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாது! அடிமை வாழ்க்கை வாழ்வதை உணரும் பிரக்ஞையின்றிய இவர்கள், எம் இனத்தின் அவமானச் சின்னங்களே!
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.